Saturday, 11 July 2020

velicham

வெளிச்சம்

பரவியிருந்த  கும்மிருட்டை 
காணாமல்  செய்தது  சூரிய  வெளிச்சம் ..

மனதில் உதித்த  எதிர்மறை  சிந்தனையை 
அகலச் செய்தது  அறிவு  வெளிச்சம் ...

ஒரு  தீக்குச்சியின்  வெளிச்சம் 
இருட்டைத்  தின்றுவிடும்...
  
இருண்ட   அறையில்  அகல்  விளக்கின்  வெளிச்சம் ...
இருட்டைத்  தேடித்தேடி  இல்லாமல்  செய்துவிடும் 

மெழுகுவர்த்தியின்  வெளிச்சம் ..
 தியாகத்தின்  அடையாளம்
  
தீப்பந்தத்தின்  வெளிச்சம் ...
 எல்லோர்க்கும் வழி  காட்ட  உதவும் 

அண்ணாமலையாரின்  தீப  வெளிச்சம் 
அகிலத்திற்கே  ஏற்றி  வைத்த  ஞான  வெளிச்சம் ..

வெற்றியைக் கொண்டாட  கொளுத்தி விடும்  
பட்டாசு  திரியிலிருந்து  புறப்படும்  வெளிச்சமே  
மகிழ்ச்சியின்  உச்சத்தின்  அடையாளம்   

வெளிச்சத்தின்  உறைவிடம்  
பிரகாசத்தின்  இருப்பிடம்

வருங்காலத்தின்  நம்பிக்கையே 
ஏழைகளின்  கண்ணில்  தெரியும்  எதிர்கால  வெளிச்சம் 

எல்லோரின்  வாழ்வின்  ஏக்கமே 
என்றாவது  ஒரு நாள்  விடியும் 
என்ற  வெளிச்சத்தை  நோக்கித்தான் 

வாருங்கள்  தோழர்களே 
 ஆளுக்கொரு தீபமேற்றி 
வெளிச்சத்தைக்  கொண்டாடுவோம் 

                                     -----------த . சத்தியமூர்த்தி  

No comments:

Post a Comment