Saturday, 22 August 2020

manasu

மனசு 

மனம்  ஒரு  காற்றாடி 
சதா  அலைந்துக்கொண்டே  இருக்கும்

மனம்  ஒரு  கற்பூரப்பெட்டகம் 
நினைவுகளை  நிரப்பிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  குரங்கு 
ஒன்றிலிருந்து  ஒன்றிற்கு  தாவிக் குதிக்கும் 

மனம்  ஒரு  மாயக்கண்ணாடி  
உலகத்திற்கு  வெளிச்சம்  போட்டு  நம்மை  காட்டிக்கொடுத்துவிடும்  

மனம்  ஒரு  பம்பரம் 
நிலையாய்  இல்லாமல்  சுற்றிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு எந்திரம் 
எப்போதும்  இயங்கிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  அதிசய  பூப்பந்து 
நம்மை  உதைத்துக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  வற்றாத  ஜீவ நதி 
எண்ணங்களை  ஆறாக  பெருக  விடும் 

மனம்  ஒரு  அழகிய  குதிரை 
நமக்கு  அடங்காமல்  ஓடிக்கொண்டே  இருக்கும் 

மனம்  ஒரு  அடங்காப்பிள்ளை 
தவறு  செய்ய  வைத்து  நம்மை  மாட்டி விடும்

மனம் ஒரு  கனவுக்கன்னி 
எட்டாததற்கு  கொட்டாவி  விடும் 

இக்கொடிய  மனதை  அடக்குவது  எப்படி ?

இருப்பதைக்கொண்டு  மகிழ்வுடன்  வாழ்வதாலும் ,
இல்லாதவர்க்கு  உதவுவதை  கடமையாக  கருதுவதாலும்,
ஆசைகளைப்   படிப்படியாக  குறைத்துக்கொள்வதாலும் ,
நல்ல  எண்ணங்களை  நாள்தோறும்  வளர்த்துக்கொள்வதாலும் 

நம்  மனதை  கொஞ்சம்  கொஞ்சமாக  
நம்  வழிக்குக் கொண்டுவந்து  அடக்கி விடலாம்    

மனதை  அடக்கி  மகிழ்வுடன்  வாழ்வோம்

---த .சத்தியமூர்த்தி 

  







No comments:

Post a Comment