தேவதை
திருமகள் அழகினில் தினம் மனம் ஏங்கும்
கலைமகள் அருளால் கவி பல பாடும்
கலைமகள் அருளால் கவி பல பாடும்
மலைமகள் மலைத்திடும் திருமகள் அழகு
மனமே நீ கொஞ்சம் அவளிடம் பழகு
பண்ணிசை பாடும் அவளது பாங்கு
பாவையின் உறவுக்கு தினம் தினம் ஏங்கு
ஏழிசை பொழியும் தேவியின் வீணை
ஏங்க வைத்திடும் கோதையின் அழகு
எண்டிசை தோறும் என்னவள் தோற்றம்
ஏனடி இன்று உன்னிடம் மாற்றம்
அன்பு நெஞ்சம் இன்று அழைத்திடும் அழைப்பு
நெஞ்சில் ஆசை இருந்தும் ஏனிந்த நடிப்பு
கைப்பற்றத் துடிக்கும் காதலன் நினைப்பு
போதையேற்றுதடி பாவை உந்தன் சிரிப்பு
காணாத போதெல்லாம் கனவினில் கிளர்ச்சி
காண்கின்ற போதினில் மனதினில் மகிழ்ச்சி
கோதை வாழ்ந்திடும் ஊரெந்தன் இதயம்
மங்கையின் வரவால் மகிழ்ச்சியின் உதயம்
காணாத வேளையிலே என்மேலே கவனிப்பு
கண்டு விட்டாலோ எனை பாராதது போல் நடிப்பு
காத்திருக்கு ரொம்ப நாளா
கன்னிப்பொண்ணு பூத்து நின்னு
பார்வைக்கது கன்னிப்புள்ள
பழக்கத்தில பச்சப்புள்ள
பரிசம் போட உள்ள புள்ள
பச்சரிசி பல்லு புள்ள
மாலை மாத்தி தேதி வச்சு
மஞ்சம் போட வாரேன் புள்ள
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment