எது அழகு!
கதிர் பரப்பி காலை வரும் கதிரவன் அழகு
முகில் கிழித்து வெளி வந்த முழு மதி அழகு
அணிஅணியாய் மேலெழும்பி வரும் கடல் அலையும் அழகு
சுதந்திரமாய் பறந்து வரும் பறவைகளும் அழகு
பூபாளம் இசைத்து வரும் விடியற்காலை அழகு
புவனமெல்லாம் பூத்து நிற்கும் மலர்களெல்லாம் அழகு
கள்ளமில்லா சிரிப்பாலே உள்ளமெல்லாம் கொள்ளை கொண்ட மழலைகளும் அழகு
கைகொட்டி ரசிக்கும் கன்னிப்பெண்ணின் கருவிழியும் அழகு
உயிரை வளர்க்கும் பயிரை வாழ வைக்க
திரண்டுவரும் கருமேகம் அழகு
வானிலிருந்து மத்தாப்புப்போல் பொழிகின்ற மாமழையும் அழகு
மழையைக் கண்ட மகிழ்ச்சியில் தன் தோகையை
விரித்து ஆடும் வண்ண மயில் அழகு
கம்பீரமாய் கடைத்தெருவில் அசைந்து ஆடி வரும் யானை அழகு
தவழ்ந்து வந்து குதித்து விழும் நீர்வீழ்ச்சி அழகு
தாவி தாவி விளையாடும் மந்திகளும் அழகு
பாட்டாளியின் கைவண்ணத்தில் உருவான கலைப்படைப்புகள் அழகு
கவிஞனின் சிந்தனையில் பிறக்கின்ற கற்பனையும் அழகு
இல்லையென்று கேட்போர்க்கு இல்லையென்று சொல்லாமல்
அள்ளி அள்ளி தரும் வள்ளலின் சிவந்த கரம் அழகு
பசி போன பின்னே ஏழையின் முகத்தில் தோன்றும்
புன்சிரிப்பே அழகுக்கெல்லாம் பேரழகு !!
--- த .சத்தியமூர்த்தி

No comments:
Post a Comment