உழைப்பு
அறியாமை இருள் கிழிக்க
பகுத்தறிவு சுடர்விட
பழமைக்கு விடைகொடு
புதுமைக்கு அழைப்பு விடு
சிந்திக்கும் திறனிங்கு
சிறக்கட்டும்
புவனமெல்லாம் செழிப்புற
புதுப்பாதை அமையட்டும்
செய்கின்ற செயல்களிலே
திறமையது வெளிப்படட்டும்
தரணியிலே இன்பமது
எல்லோர்க்கும் கிடைக்கட்டும்
உழைப்பதனால் மட்டும் தான்
உயர முடியும் ஒருவனால் இங்கு
உட்கார்ந்து கதைபேசி
உவகையினை இழக்க வேண்டாம்
கடுமையாக உழைப்பதனால்
கவலையெல்லாம் பறந்தோடும்
காசுபணம் குறைந்தாலோ
வருத்தம் மீண்டும் வட்டமிடும்
இனிமையாக பேசி பேசி
இதயத்தை தாலாட்டு
வறுமை வந்து வாட்டும் போதும்
திறமை உண்டு மறவாதே
உழைப்பதற்கு உற்சாகமாக புறப்படு
வழி காட்ட தாயுண்டு
வாழ்த்துரைக்க மனைவியுண்டு
அன்பு கொள்ள சேயுண்டு
ஆண்டவனின் அருளுண்டு
------த . சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment