சொந்த ஊர்
நாகரிகத்தின் நிழல் கூட நான்
பிறந்த ஊரில் படவில்லை
பழமையான மனிதர்களின்
புதுமையான சிந்தனைகள்
செடி கொடிகள் ஏராளம் - அதனால்
செழுமைகளும் தாராளம்
வீசுகின்ற காற்றைக் கூட
விரும்பி நான் நேசித்ததுண்டு
தாளம்போட்டு தாளம்போட்டு
பயிரெல்லாம் கூத்தாடும்
வளர்ந்து நின்ற பயிரைக் கூட
வாஞ்சையோடு அணைத்ததுண்டு
மடையில் ஓடும் நீரை அள்ளி
மகிழ்ச்சியோடு சிரித்ததுண்டு
பொங்கிவரும் அருவி நீரை ரசித்து
பொழுதெல்லாம் கழித்ததுண்டு
தொங்குகின்ற விழுதுப்பற்றி
ஊஞ்சலாடி மகிழ்ந்ததுண்டு
மனம் போன போக்குப்படி
தனிமையிலே திரிந்ததுண்டு
கவலையின்றி காலமெல்லாம்
களிப்போடு கழித்ததுண்டு
இனிமையிலே மிதந்ததுண்டு
மலையின் மீது நானும் ஏறி
முருகன்கோயில் போனதுண்டு
திருவிளக்கு ஏற்றி வைத்து
மணியடித்து மகிழ்ந்ததுண்டு
ஆயிரம் மைல் கடந்தாலும்
அன்பான , அழகான
என் ஊருக்கு இணையாக
எந்த நகரமும் இல்லை
----- த . சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment