நட்பு
இனிமையாக பொழுது போக்க
இரண்டுபேர் கூடுவது நட்பல்ல
துன்பம் வந்து வாடுகின்ற நேரத்தில்
துணையாக வந்துநின்று வாஞ்சையோடு
உதவி செய்யும் உள்ளந்தான் உயர்ந்த நட்பு
இன்பம் துன்பம் எல்லாவற்றிலும்
உரிமையோடு பங்குகொள்ளும்
உயர்ந்த உள்ளந்தான் உண்மை நட்பு
ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை வந்தும்
உள்ளத்தால் பிரியாது
எண்ணத்தால் நினைப்பதுதான் சிறந்த நட்பு
நண்பனின் முன்னேற்றத்தில் உண்மையான
ஈடுபாட்டோடு
உதவிகள் செய்வதுவே உத்தமமான நட்பு
கடல் கடந்து பணிக்காக நெடுந்தூரம் சென்றாலும்
கண்ணுக்குள் நினைவுக்குள் பக்கத்தில்
நண்பனை வைத்திருப்பதே பாசமிகு நட்பு
இனங்கடந்து , மொழிகடந்து, மதங்கடந்து
இதயத்தின் இணைப்பாலே கிடைக்கின்ற
நல்லுறவு நலம் நாடும் இனிய நட்பு
தெரிந்தே தவறு செய்தது , நண்பன்
என்றாலும் மன்னிக்கும்
மனப்பக்குவம்தான் உண்மை நட்பு
ஆம் .. நட்பென்பது கடவுள் நமக்குத்தந்த
நற்பரிசு ..
இதயத்தை தாலாட்டும் இனிய வரவு
அரிய உறவு ..
-------த . சத்தியமூர்த்தி
-------த . சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment