கொரோனா
மனித சமூகத்தை அச்சுறுத்தும்
கொடிய வைரஸ் கொரோனாவே
நீ வந்த வழியே திரும்பி போ
அச்சப்படாதே மானிடா
அடுத்தடுத்த நாட்களில்
ஒன்று பட்ட சமூகத்தின்
ஒத்துழைப்பே -இக்கொடிய
வைரஸை விரட்டியடிக்கும்
தனித்தனிக் குடும்பங்கள் தங்களை
தனிமைப்படுத்துவது ஒன்று தான்
இதை பரவாமல் தடுக்க
உதவும்
விரும்பியதை செய்து கொண்டு
வீட்டிலே இருங்கள்
அவசியம் என்றாலொழிய
வெளியே வராதீர்கள்
அரசாங்கத்தோடு இணைந்து
அக்கறையோடு செயல்படுங்கள்
ஒன்றுபட்ட சமூகம் தான் எந்த
சவாலையும் வென்று காட்டும்
இரவு பகலாய் பணியாற்றும்
மருத்துவம் , சுகாதாரம் , காவல்துறை
பணியாளருக்கு நன்றி பாராட்டுவோம்
குமரி முதல் இமயம் வரை
பரந்து பட்ட பாரத தேசமே
உறுதியாக எதிர்த்து நின்று
இக்கொடிய வைரஸை
வென்றதென்ற வெற்றிசெய்தியை
ஊது சங்கே
உரக்க ஊது சங்கே
------ த . சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment