துணிவு வேண்டும்
கண்ணாலே சிறை செய்த
பெண் முன்னாலே ஊமையானேன்
பண்பாடும் கவி உள்ளம்
பண்போடு பழகும் நாளும்
உன்பால் நான் கொண்ட அன்பு
நிழலாய் தொடர்ந்து உனை வந்து சேரும்
அன்பாலே அடிமை செய்த அழகே !!
அன்றாடம் அலங்கரித்த சிலையே !!
உள்ளமிங்கு உனக்கு என்று
உரிமையோடு எடுத்துச்சொல்ல
சொல்லிவிடத் துடிக்கிறேன்
சொந்தம்கொள்ள நினைக்கின்றேன்
வரும்வரையில் காத்திருந்து
வந்த பின்னே பேச்சிழந்து
பார்வையாலே தாக்குண்டு
பாவையாலே அடிப்பட்டு
நாளெல்லாம் துடிக்கின்றேன்
பேசாமல் ஓர் உறவு தினந்தோறும் தொடர்கிறது
விழியாலே விழுங்குகின்ற விந்தை
தினம் நடக்கிறது
வாயாடி பட்டம்பெற்ற வஞ்சியும் தான்
ஊமையான விந்தையென்ன
சிரிப்பொன்றை அள்ளி வீசி தினம்
சித்திரவதை செய்வதென்ன
துணிந்து சொல்ல நினைகின்றேன்
சொல்லிவிடத் துடிக்கிறேன்
சொந்தம்கொள்ள நினைக்கின்றேன்
வரும்வரையில் காத்திருந்து
வந்த பின்னே பேச்சிழந்து
பார்வையாலே தாக்குண்டு
பாவையாலே அடிப்பட்டு
நாளெல்லாம் துடிக்கின்றேன்
பேசாமல் ஓர் உறவு தினந்தோறும் தொடர்கிறது
விழியாலே விழுங்குகின்ற விந்தை
தினம் நடக்கிறது
வாயாடி பட்டம்பெற்ற வஞ்சியும் தான்
ஊமையான விந்தையென்ன
சிரிப்பொன்றை அள்ளி வீசி தினம்
சித்திரவதை செய்வதென்ன
துணிந்து சொல்ல நினைகின்றேன்
துணைக்கு தைரியத்தை அழைக்கின்றேன்
எடுத்துரைத்தால் ஏற்றுக்கொள்வாள்
என்னாலோ முடியவில்லை
நாணம் வந்து தடுப்பதாலோ
நங்கையாலும் முடியவில்லை
எடுத்துரைக்கும் துணிவு வேண்டும்
இல்லையெனில்
காதலிலே இறங்க வேண்டாம்
---- த . சத்தியமூர்த்தி
எடுத்துரைத்தால் ஏற்றுக்கொள்வாள்
என்னாலோ முடியவில்லை
நாணம் வந்து தடுப்பதாலோ
நங்கையாலும் முடியவில்லை
எடுத்துரைக்கும் துணிவு வேண்டும்
இல்லையெனில்
காதலிலே இறங்க வேண்டாம்
---- த . சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment