தொடக்கம்
எடுக்கின்ற செயல்கள்
எல்லாமும் வெற்றி பெற
அறிவார்ந்த சிந்தனையின் தொடக்கம் தான்
சீர் மிகு துவக்கமாகும்
இடைவிடாத முயற்சிக்கு
இடையிடையே பங்கம் வந்தாலும்
முடிவில்லாத முயற்சி தான்
முன்னேற்றத்தின் பாதையென்று
உறுதியோடு சொல்லுகின்ற தொடக்கம் தான்
உலகையாள வழி வகுக்கும் துவக்கமாகும்
பாதைகளை தினம் மாற்றி
பண்பு தனை மறந்து மனம்
போன படி வாழ்வதுவோ
அழிவின் தொடக்கமாகும்
அதுவே மாற்றார் வெறுக்கும் துவக்கமாகும்
உட்கார்ந்து கதைபேசி
காலத்தை வீணாக்காமல்
உத்வேகத்தோடு ஆரம்பிக்கும்
உழைப்பின் தொடக்கம் தான்
இந்தியாவை வல்லரசாக்கும்
இனிமையான துவக்கமாகும்
தொடக்கத்தின் எழுச்சி தான்
வெற்றியின் யுக்தியாகும்
அடியெடுத்து வைத்தால் தான்
நம் இலக்கை எட்ட முடியும்
------- த . சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment