தியாகம்
மணம் பரப்பும் மலரெல்லாம்
மாலை சென்றால் உதிர்ந்துவிடும்
வாடுமுன்பு வாசலெங்கும் இனிய
வாடைத்தந்து விடைபெறும்
உள்ளதெல்லாம் அள்ளித்தரும்
வள்ளலான வாழைப்போல்
தியாகம் செய்யும் எண்ணம் வேண்டும்
சேவை செய்யும் உள்ளம் வேண்டும்
எல்லாமும் எனக்கே வேண்டும் என்று
என்னுகின்ற சுயநலத்தை விட்டுத்தள்ளு
பங்குபோட்டு பிரித்துக்கொள்ளும்
பரந்த மனமே வந்து சேரு
வறுமை நோயில் வருத்தப்பட்டு
வாசல் தேடி வருவோர்க்கு
பழைய சோற்றைக் கொடுத்தாவது
பசித்த வைற்றில் பாலை ஊற்று
இல்லை என்று சொல்லி நம் இல்லம் தேடி
வருவோர்க்கு உதவி இல்லை என்று சொல்லாது
இருப்பதிலே கொஞ்சம் பிரித்துக் கொடு
கடிந்துரைக்கும் வார்த்தைகளை மறந்துவிட்டு
அன்போடு ஆறுதலாய் மொழி பேச கற்றுக் கொள்
மெழுகு போல் உருகுகின்ற உள்ளம் வேண்டும்
பாறை போல உறைந்திருக்கும் உள்ளம் வேண்டாம்
தன்னலமற்ற மகாத்மாவின் தியாக வாழ்வினால்
தான் தேசத்திற்கு விடுதலைக் கிடைத்தது
எல்லையில் அணிவகுக்கும் ராணுவ வீரர்களின்
உயிர் தியாகத்தில் தான்
தேசம் பாதுகாப்பாய் விழித்தெழுகிறது
அன்னை தெரேசாவின் தியாகவாழ்வு போல்
அனைவரும் வாழ முயற்சிப்போம்
----- த. சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment