வெற்றி படிக்கட்டு
வாழக்கையெனும் பாதையிலே
வழியெல்லாம் முட்புதர்கள்
கடந்த பாதை எங்கெங்கும்
கறை படிந்த அனுபவங்கள்
மனம் சுமந்த பாரங்கள்
தொடர்ந்து வரும் சோகங்கள்
காட்டாற்று வெள்ளம் போல்
அடுத்தடுத்து சோதனைகள்
கட்டுக்குள் அடங்காத
கலைஞனின் தாபங்கள்
துரத்துகின்ற துரோகங்கள்
தூது விடும் சாபங்கள்
மனம் பட்ட காயங்கள்
மயக்கத்தின் பாவங்கள்
கற்று தந்த பாடங்கள்
கரை சேர்க்கும் மார்க்கங்கள்
ஆறாத தழும்புகள் தான்
அடையாள முத்திரைகள்
வெற்றியெனும் தேவதையை
தொட்டு விடும் முன்பாக
பெற்று விடும் பாடங்களே
இங்கு
ஆறாத தழும்புகளாம்
த . சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment