காதல் ஒரு கண்ணாமூச்சி
எத்தனைப் பிறவிகள் காத்திருந்தாய்
இப்படி என்னை ஏமாற்றிட
சொர்க்கத்தின் விளிம்பு வரை கூட்டி வந்து
கொடிய நரகத்தில் தள்ளியதேன்
நீ கண்ணுக்கு மட்டும் இடவில்லை மையை
உன் சொல்லுக்கும் சேர்த்தாய் பொய்யை
அரிய பொக்கிஷம் கிடைத்ததென்று
ஆனந்தத்தில் திளைத்திருந்தேன்
நீயோ எட்டாத தொலைவில் இருந்து கொண்டு
எனை அழ வைத்தாய்
என் நிழல் கூட எனைப்பார்த்து சிரிக்கிறது
என் நிழல் கூட எனக்கிங்கு சுடுகிறது
வசந்தம் வந்தது வாழ்வும் வந்தது என
வண்ணக் கனவுகளில் மிதந்திருந்தேன்
பகற்கனவென்று படைத்தவன்
எனைப் பார்த்து சிரிக்கின்றான்
நான் கொஞ்சம் வாய்விட்டு
சிரித்து விட்டால் போதும்
அந்த ஆண்டவனுக்குப் பொறுக்காது
எனை அழவைக்க உடனே யாரையாவது
அனுப்பி வைப்பான் - அவன் கடைசியாக
அனுப்பி வைத்தது உன்னைத் தான்
அழகு நிலவை அண்ணாந்து பார்த்தால் போதும்
மேகத்தைக் கூட்டி வந்து மறைத்து விடுவான்
முல்லையை தொட்டு ரசித்தால் போதும்
முள்ளாலே குத்தி அவன் ரசிப்பான்
தென்றல் வந்து மேனியை தழுவினால் போதும்
புயலாக மாற்றும் வரை ஓய மாட்டான்
சோலையிது என மகிழ்ந்தால் போதும்
பாலையாய் மாற்றி பரிகசிப்பான்
மனைவி வரப் போகின்றாள் என
மகிழ்ந்திருந்தேன் - அது
மாயை என்று வழக்கம் போல்
வாழ்த்தி விட்டான்
எது எப்படி ஆனாலும்
உன்னோடு நான் இணைவது நிஜம்
இந்த முறை தோற்கப் போவது
அவன் தான் - ஆம்
அந்த ஆண்டவன் தான்
---------------- த .சத்தியமூர்த்தி
சொர்க்கத்தின் விளிம்பு வரை கூட்டி வந்து
கொடிய நரகத்தில் தள்ளியதேன்
நீ கண்ணுக்கு மட்டும் இடவில்லை மையை
உன் சொல்லுக்கும் சேர்த்தாய் பொய்யை
அரிய பொக்கிஷம் கிடைத்ததென்று
ஆனந்தத்தில் திளைத்திருந்தேன்
நீயோ எட்டாத தொலைவில் இருந்து கொண்டு
எனை அழ வைத்தாய்
என் நிழல் கூட எனைப்பார்த்து சிரிக்கிறது
என் நிழல் கூட எனக்கிங்கு சுடுகிறது
வசந்தம் வந்தது வாழ்வும் வந்தது என
வண்ணக் கனவுகளில் மிதந்திருந்தேன்
பகற்கனவென்று படைத்தவன்
எனைப் பார்த்து சிரிக்கின்றான்
நான் கொஞ்சம் வாய்விட்டு
சிரித்து விட்டால் போதும்
அந்த ஆண்டவனுக்குப் பொறுக்காது
எனை அழவைக்க உடனே யாரையாவது
அனுப்பி வைப்பான் - அவன் கடைசியாக
அனுப்பி வைத்தது உன்னைத் தான்
அழகு நிலவை அண்ணாந்து பார்த்தால் போதும்
மேகத்தைக் கூட்டி வந்து மறைத்து விடுவான்
முல்லையை தொட்டு ரசித்தால் போதும்
முள்ளாலே குத்தி அவன் ரசிப்பான்
தென்றல் வந்து மேனியை தழுவினால் போதும்
புயலாக மாற்றும் வரை ஓய மாட்டான்
சோலையிது என மகிழ்ந்தால் போதும்
பாலையாய் மாற்றி பரிகசிப்பான்
மனைவி வரப் போகின்றாள் என
மகிழ்ந்திருந்தேன் - அது
மாயை என்று வழக்கம் போல்
வாழ்த்தி விட்டான்
எது எப்படி ஆனாலும்
உன்னோடு நான் இணைவது நிஜம்
இந்த முறை தோற்கப் போவது
அவன் தான் - ஆம்
அந்த ஆண்டவன் தான்
---------------- த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment