வெற்றியின் இரகசியம்
மண்ணை நம்பி பயிரு இங்கே செழித்து வளருதுங்க
பெண்ணை நம்பி குடும்பம் இங்கே முன்னுக்கு வருதுங்க
மண்ணும் பெண்ணும் நல்லா அமைஞ்சா வாழ்க்கை மின்னுங்க
வாழுற வாழ்க்கையை ஊறு மெச்சவே வாழ்ந்து பாருங்க
இறைக்கிற கிணறு சுரக்குமுன்னு சொன்னது பொய்யில்லே
ஏழை பாழைக்கு உதவுவதாலே கொஞ்சமும் குறைவதில்லே
படிப்பு மட்டுமே பரம்பரைக்கு சொத்தா சேத்து வையுங்க
பாழாப்போன பணத்தாலே மனசு ரொம்ப கெட்டுப்போச்சுங்க
சத்தியம் தான் ஜெயிக்கும்னு சந்ததிக்கு சொல்லி வையுங்க
வருங்கால தலைமுறை நேர்மையோடு நடக்கும் பாருங்க
விதியின் பேரைச் சொல்லி மதியை மழுங்கச் செய்வாங்க
கர்ம வினையென்று பல கதைகளைக் கட்டி விடுவாங்க
பாவத்தின் சம்பளமென்று பழைய பல்லவியைப் பாடிச் செல்வாங்க
பத்தாம் பசலியின் பசப்பு வார்த்தையை ஒதுக்கி தள்ளுங்க
வெளியே வந்தால் வெற்றி இருக்குது
நம்பிக்கையோடு புறப்பட்டு வாருங்கள்
செக்கு மாடு போலவே செஞ்ச வேலையை
திரும்ப திரும்ப செய்யாம
கொஞ்சம் மாத்தி யோசித்து , திறமையைக்கூட்டி
புதுசா ஏதாவது செஞ்சா தான் ஊறு மெச்சுங்க
இது தான் உழைப்பின் ரகசியங்க !
இதுவே வெற்றியின் ரகசியங்க !!
----த .சத்தியமூர்த்தி