அண்ணல் அம்பேத்கர்
தீண்டாமை என்னும் பேராலே நடந்த
ஆதிக்கச் சக்திகளின் அட்டூழியத்தை ஒடுக்க,
சமஉரிமை, சமவாய்ப்பு, சமஅந்தஸ்து , மறுக்கப்பட்ட
கேட்பாரற்றுக்கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்காக
சேற்றிலே பிறந்த செந்தாமரைப் போல் ,
கல்வி எனும் கேடயத்தை அஸ்திரமாய் அணிந்துக் கொண்டு
கீழ் வான் உதித்த கோடி சூரியன் போல் ஒரு
சாதாரணக் குடும்பத்தில் வந்து பிறந்தார்
அண்ணல் அம்பேத்கர்
ஜாதியின் பேராலே அவரைப் பள்ளியிலே மற்ற
மாணவர்களோடு சேர விடாமல் தடுத்து ,
தனியே அமரவைத்து , குடிப்பதற்கு தனியே குவளை
அமைத்து , தொடர்ந்து அவமானப் படுத்திய போதும்
கல்விதான் நம்மையும் நமது சமூகத்தையும்
பாதுகாக்கும் என்பதால் அத்தனைக் கொடுமைகளையும் தாங்கிக்கொண்டார்
ஆரம்பக்கல்வி , உயர்நிலைக்கல்வி ,கல்லூரிப்படிப்பு ,
வெளிநாட்டில் மேல்நிலைப்படிப்பு , சட்டப்படிப்பு, என
படிப்பில் அடுத்தடுத்த நிலைகளைக்கடந்து நாடு
விடுதலைக்குப்பின் நேருவின் அமைச்சரவையில்
சட்டமந்திரியானார்
அரசியல் வல்லுனர்களோடும் , சட்ட மேதைகளோடும் ,
இணைத்து அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றினார்
"நமக்கு மேலாக ஒருவருமில்லை
நம்மை விட தாழ்ந்தவன் ஒருவருமில்லை"
"அரசியல் விடுதலை பொருளாதார விடுதலை இதைவிட
சமூக விடுதலை மிகமிக அவசியமானது "
வாழ்நாள் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின்
விடிவெள்ளியாக வாழ்த்த அண்ணல் அம்பேத்கர்
தன் வாழ்வின் மூலம் சொன்ன செய்தி
கல்வி தான் நமக்கு உயர்ந்த அந்தஸ்தைப்
பெற்றுத்தரும்
எனவே எப்பாடுப்பட்டாவது கல்வியை
நம் தலைமுறைக்குக் கட்டாயமாக்குவோம்
வாழ்க ! அண்ணல் அம்பேத்கர் புகழ் !!
--த.சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment