Sunday, 4 July 2021

இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-2

 இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-2

ஈழத்து  சகோதரர்களை  தமிழகத்திற்கு 
அழைத்து  வந்து , அன்றைய  இந்திய  அரசு 

ஆயுதப்  பயிற்சி  அளித்தது   இன்றைய 
இளைஞர்களுக்கு  தெரிய  வாய்ப்பில்லை ..

மறைந்த  மக்கள்  திலகம்  M.G.R  அவர்கள் 
ஈழ  விடுதலைக்காக  பெரும்  தொகையை
  
புலிகளுக்கு  நிதியாக  வாரி  வழங்கினார் ..
இதெல்லாம்  கடந்த  கால  வரலாறு. 

ஈழ  மண்ணில்  90,000 விதவைகள்  தங்கள் 
வாழ்வுக்காக , இன்றும்  போராடுகிறார்கள் .

முள்ளி  வாய்க்கால்  படுகொலையை 
முன்னின்று  நடத்திய  மாபாவிகளிடம் ,

இனவெறிப்  பிடித்த  சிங்கள  மக்கள்  மீண்டும் 
ஆட்சி  அதிகாரத்தைக்  கொடுத்துள்ளார்கள் .

ஈழப்  படுகொலை  நடந்து  ஆண்டு  பல 
கடந்தும்  பாதிக்கப்பட்ட  அம்மக்களுக்கு ,

சர்வதேச  சமூகத்திடமிருந்து  நீதி  கிடைக்கவில்லை !!!
  
இதைப்பற்றியெல்லாம்  பேசாமல் ,
 
திராவிடம் 2.0 , அரக்கன் என  புதுப்புது  பெயரில்
அரைவேக்காட்டு , அதிமேதாவிகள் 

ஈழ  விடுதலை  நெடும்  வரலாற்றை  முழுவதும் 
படிக்காமல்  ஏதேதோ  பிதற்றுகிறார்கள் . 

புலிக்கொடியோடு  தமிழகத்தில்  வலம் வந்த
நாம்தமிழர் 

புலித்தலைவரைக்  கொச்சைப்படுத்தும்  போது ,
ஆவேசமாக  பேசாமல்  அமைதி  காப்பது  
ஆச்சரியமளிக்கிறது  !! 

  -----வேண்டுகோள்  தொடரும்----

த . சத்தியமூர்த்தி  







 

No comments:

Post a Comment