இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-3
தமிழீழம் ஒன்றே ஈழமக்களின் விடுதலைக்கான
ஒரே வழி என்று இறுதியாக தீர்மானித்து,
கட்டுகோப்பான , ஒழுக்கமான , ஒரு நல்ல
மக்கள் இராணுவத்தைக் கட்டமைத்து ,
சிங்கள பேரினவாதத்தை நடுநடுங்க வைத்து ,
தமிழர் நிலப்பரப்பை பல காலம் பாதுகாத்து ,
ஈழ மக்களின் காவல் தெய்வமாக வலம் வந்து ,
கடமையுணர்வோடு , களப்பணியாற்றி ,
இறுதிக்கட்ட யுத்தத்தில் தன் குடும்பம் முழுவதையும்
பலிகொடுத்து , தியாகம் , வீரம் , இவற்றின்
சின்னமாய் விளங்கும்
மேதகு மாவீரன் பிரபாகரனின் பிம்பத்தை
உலகில் எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது !!!
மோடியின் வெறுப்பு என்னும் ஒற்றைக் காரணத்தால் ,
தமிழக மக்களால் அலங்கரிக்கப்பட்ட
ஆட்சிக்கட்டிலில் , அமர்த்தி அழகுபார்க்கப்பட்ட
தி .மு .க அரசு இதைக் கண்டும் காணாமல்
இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது .
ஈழ விடுதலைப்பற்றியும் , அம்மக்களை
பாதுகாத்த இயக்கத்தைப் பற்றியும் ,
தவறாக பிரச்சாரம் செய்வதை நேர்மையான
திராவிடப் பற்றாளர்கள் எவரும்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ..
----வேண்டுகோள் தொடரும்
த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment