Saturday, 17 July 2021

இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-4

இரு  சாராருக்கும்  கனிவான  வேண்டுகோள் -4

தமிழகத்தில்  திராவிடத்தின்  வாக்கு வங்கி  80% இருக்க 
யாரைப்பார்த்து, எதற்க்காக  தேவையற்ற  வீண்  அச்சம் ?

சங்கிகள்  மகிழ்ச்சியடையும்  வகையில், 
 இனவிரோத  நடவடிக்கையில்  யாரும்  ஈடுபடாதீர்கள் 

தமிழகத்தையும், தமிழர்களையும்  பிரித்தாளும் 
சூழ்ச்சிக்கு  தெரிந்தோ,  தெரியாமலோ , யாரும்  
துணைபோகாதீர்கள்      

மதத்தை வைத்தோ,  ஜாதியை  வைத்தோ,
தமிழக மக்களிடம் அரசியல்  நடத்த  முடியாது 

என்பதையே  நடந்து  முடிந்த 
 சட்டசபைத்  தேர்தல் 
எதிரொலித்தது 

மக்களுக்காக  நல்லாட்சி  தரவேண்டும்  என்ற 
முனைப்புடன்  செயல்படும்  மாண்புமிகு  முதல்வர் 
தளபதியாரின் 
கரத்தை  வலுப்படுத்துங்கள் 

திராவிடமோ,  தமிழ்தேசியமோ,  தங்கள்
  கொள்கைகளை   மக்களிடம்  கொண்டு  செல்லுங்கள் 

மக்களின்  தீர்ப்புக்கு  தலைவணங்குங்கள் 

மறைந்த  மாபெரும்  தலைவர்களை , 
அவர்களின்  உழைப்பை , தியாகத்தை , 
தங்கள்  நலனுக்காக   வசைப்பாடாதீர்கள்

இதுவே  இருசாராருக்கும்  
தமிழின்பால்,  தமிழினத்தின்பால் ,
கொண்ட  பற்றின்பால்  வைக்கும் 

கனிவான  அன்பு  வேண்டுகோள் -

த .சத்தியமூர்த்தி  




No comments:

Post a Comment