திட்டமிடல்
அறிவை வளர்த்துக்கொள்ள நல்ல நல்ல
நூல்களை நாள்தோறும் படிக்க திட்டமிடல் வேண்டும்
ஆரோக்கியம் பெருக நல்ல நல்ல
பழக்கங்களை கை கொள்ள திட்டமிடல் வேண்டும்
முதுமையில் மகிழ்ச்சிக்கு
இளமையில் திட்டமிடல் வேண்டும்
நாட்டின் வளர்ச்சிக்கு அரசாங்கம் நல்ல நல்ல
திட்டங்களை உருவாக்க திட்டமிடல் வேண்டும்
செலவைக் குறைத்து சேமிப்பை வளர்க்கும் நல்ல
வாழ்வியலை கையாள திட்டமிடல் வேண்டும்
வணிகத்தைப் பெருக்கிக் கொள்ள நல்ல நல்ல
வாய்ப்புக்களை ஏற்படுத்த திட்டமிடல் வேண்டும்
வசதியை அதிகரிக்க நல் வழியில்
வருமானத்தை அதிகரிக்க திட்டமிடல் வேண்டும்
மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க
நல்லாட்சி மலர திட்டமிடல் வேண்டும்
ஜனநாயகப் பண்புகளைப் பாதுகாக்கும் நல்ல
அரசாங்கம் அமைய திட்டமிடல் வேண்டும்
ஜாதி மத பேதங்கள் கடந்து சமூக நீதிக்காக
மக்கள் திரள திட்டமிடல் வேண்டும்
ஏற்ற தாழ்வு இல்லாத சம தர்ம சமுதாயம் மலர
இளைய தலைமுறை ஒன்றுகூடி திட்டமிடல் வேண்டும்
ஒன்றுபட்டு எல்லோரும் ஒற்றுமையாய் வாழ நம்முள்
இருக்கும் பேதங்கள் களைய திட்டமிடல் வேண்டும்
மக்களை மதிக்கின்ற மக்களாட்சி மலர்ந்ததென்று
மகிழ்ச்சியில் திளைக்க திட்டமிடல் வேண்டும்
-----------------த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment