Saturday, 30 April 2022

Pen Parkkum Padalam- 2

பெண்  பார்க்கும்  படலம் -2

படித்தப் பெண்  என்பதால்  மெல்ல  மெல்ல  புரிந்துக்  கொண்டு 
அவளே  முன் வந்து உங்கள்  ஆசையை  நிறைவேற்றுவாள் 

பிறந்ததிலிருந்து  அவள் ஆசைப்  பட்டதையெல்லாம் 
அப்படியே  வாங்கித்தரும்  நீங்கள்  அவள்  

திருமணத்தில்  மட்டும்  உங்கள்  எண்ணத்தைத்  திணிக்காதீர்கள்  
பெண்ணை   அவள்   விருப்பப்படி வாழ  விடுங்கள் 

ஜாதியின்  பேரால் , மதத்தின்  பேரால், பெண்ணை 
பலியிடுவதைத்  தடுத்து  நிறுத்துங்கள் 

எந்த   மதமும் , எந்த  ஜாதியும்  உங்கள்  
அன்பு  மகளைத்  திரும்ப  தரப்  போவதில்லை 
 
ஆவணக்  கொலைகளைத்    தடுக்க  கடுமையான  
சட்டம்  கொண்டு  வாருங்கள் 
  
ஒவ்வொரு முறை பெண்  பார்க்கும்  படலம்  நடக்கும்  போதும் 
இந்த  வரனாவது  முடியாதா !  என  பெண்ணைப் பெற்றோர் 

ஏங்குகின்றனர் , ஆனால்  
கூட்டமாக  வந்து  அமர்ந்துக்  கொண்டு , கொடுக்கும்  

தின்பண்டத்தைக்   கொறித்துக்   கொண்டு , பெண்ணை 
கண்காட்சி  பொம்மையாகப்  பார்ப்பதும் , 

தங்களுக்குள்  முணுமுணுத்துக்  கொள்வதும்,
எதோ  இந்திரலோகத்திலிருந்து   வந்த அழகு  

சுந்தரிகள்  போல்  தங்களைப்  பாவித்துக் கொண்டு,
பெண்ணை  விமர்சிப்பதும் , எந்தவொரு  பதிலும்  

சொல்லாமல்  எழுந்து  செல்வதும் , காலங்காலமாக  
பெண்   சமூகம் சந்திக்கும்  சகிக்க  முடியாத   கொடுமையாகும் 

பெண்  பார்க்க   வரும்  மாப்பிள்ளை  வீட்டார்  தங்கள் 
வீட்டிலும்  திருமணத்திற்கு  தயாராய்  ஒரு  பெண்  

இருக்கிறாள்  என்பதைப்  புரிந்துக்கொண்டு  
நாகரிகமாக  நடக்க  வேண்டும் 

பெண்ணியம்  பேசும்  நாம்  பெண்ணின்  திருமண 
உரிமையையும்  சேர்த்துப்  பேசுவோம் 

--த .சத்தியமூர்த்தி 


Sunday, 24 April 2022

Pen Parkkum Padalam

 பெண்  பார்க்கும்  படலம் 

பெண்ணைப்  பிடிக்கிறதா ? கல்யாண  மாப்பிள்ளையிடம்  
கட்டாயமாய்  கேட்கப்படும்  அதே  கேள்வி  

மாப்பிளையைப்  பிடிக்கிறதா ? பெண்ணிடம்  
ஏனோ  பெரும்பாலும்  கேட்பதில்லை 

நான்  பார்த்த  மாப்பிள்ளை  என்  பெண்ணுக்கு  
மிகப்  பொருத்தம் . பெற்றோர்  சமூகம்  பிதற்றுகிறது 

என்  பெண்ணுக்கு ஏற்ற  மாப்பிள்ளை  
தாய்க்கும்  தந்தைக்கும்  ஏகப்பட்ட  பெருமை 

விடிந்தால்  கல்யாணம். பெண்ணைக்  காணவில்லை ,
கல்யாணத்துக்கு  ஒரு வாரம் பெண்  விஷம்  குடித்தாள்

     பத்திரிகைகளில்  பலவாறு  பரபரப்புச்  செய்திகள் 
பெற்ற  மகளிடம்  அவள்  விருப்பத்தைக்  கேட்பதில் 

அப்படி  என்ன  கௌரவக்  குறைச்சல் !
  
உங்களுக்காக  நீங்கள்  எடுக்கும்  ஆடையை  
விரும்பாத  பட்சத்திலும் , ஓரிருமுறை  போட்டுவிட்டு  

ஒதுக்கி  விடலாம். ஆனால்  மாப்பிள்ளை  அப்படியா ?
பொருந்தாத  பட்சத்தில்  , அல்லது  அவள்  ஏற்கனவே  

ஒருவரை  விரும்பும்  பட்சத்தில் , வாழ்க்கை  முழுவதும்  
கட்டிக்கொண்டு  அவஸ்தை  அல்லவா 

காலம்  மாறி  விட்டது
  
பெண்ணுக்கு  பிடித்தவன்  எல்லா  வகையிலும் 
 பொருத்தமானவன் என்றால்  

நீங்களே  முன்னின்று  திருமணத்தை  முடித்து  வையுங்கள் 

பெண்  தேர்ந்தெடுத்தவன்  சரியல்லையென்றால் 
பொறுமையுடன்  பேசி  புரிய  வையுங்கள்

மெல்ல  மெல்ல  அவனைப்  பற்றிய  தகவல்களைச் 
சேகரித்து  ஆதாரத்துடன்  அழுத்திச்  சொல்லுங்கள் 

அவள்  எத்தனைப்  பெரிய  ஆபத்தில்  சிக்கியுள்ளாள்  
என்பதை  மீண்டும்  மீண்டும்  எடுத்துச்  சொல்லுங்கள் 

------------தொடரும் -----------

----த .சத்தியமூர்த்தி 

Sunday, 17 April 2022

அண்ணல் அம்பேத்கர்

அண்ணல்  அம்பேத்கர்  

தீண்டாமை  என்னும்  பேராலே நடந்த  
ஆதிக்கச்  சக்திகளின்  அட்டூழியத்தை  ஒடுக்க, 

சமஉரிமை, சமவாய்ப்பு, சமஅந்தஸ்து , மறுக்கப்பட்ட 
கேட்பாரற்றுக்கிடந்த  தாழ்த்தப்பட்ட  மக்களுக்காக  

சேற்றிலே  பிறந்த  செந்தாமரைப்  போல் ,  
கல்வி எனும்  கேடயத்தை  அஸ்திரமாய்  அணிந்துக்  கொண்டு 

கீழ்  வான்  உதித்த  கோடி  சூரியன்  போல்   ஒரு 
சாதாரணக்  குடும்பத்தில்  வந்து  பிறந்தார்  

அண்ணல்  அம்பேத்கர்  

ஜாதியின்  பேராலே  அவரைப்  பள்ளியிலே  மற்ற  
மாணவர்களோடு  சேர  விடாமல்  தடுத்து , 

தனியே  அமரவைத்து , குடிப்பதற்கு  தனியே  குவளை 
அமைத்து , தொடர்ந்து  அவமானப்  படுத்திய  போதும் 

கல்விதான்  நம்மையும்  நமது  சமூகத்தையும்  
பாதுகாக்கும்  என்பதால்  அத்தனைக்   கொடுமைகளையும் தாங்கிக்கொண்டார்

ஆரம்பக்கல்வி , உயர்நிலைக்கல்வி ,கல்லூரிப்படிப்பு ,
வெளிநாட்டில்  மேல்நிலைப்படிப்பு , சட்டப்படிப்பு, என 

 படிப்பில்  அடுத்தடுத்த நிலைகளைக்கடந்து  நாடு  
விடுதலைக்குப்பின்  நேருவின்  அமைச்சரவையில்  
சட்டமந்திரியானார்

அரசியல் வல்லுனர்களோடும் , சட்ட  மேதைகளோடும் , 
இணைத்து  அரசியலமைப்புச்  சட்டத்தை  இயற்றினார் 

"நமக்கு  மேலாக  ஒருவருமில்லை  
நம்மை விட  தாழ்ந்தவன்  ஒருவருமில்லை"

"அரசியல்  விடுதலை  பொருளாதார விடுதலை  இதைவிட 
சமூக  விடுதலை  மிகமிக  அவசியமானது "

வாழ்நாள்  முழுவதும்  தாழ்த்தப்பட்ட  மக்களின்  
விடிவெள்ளியாக  வாழ்த்த  அண்ணல்  அம்பேத்கர்  

தன்  வாழ்வின்  மூலம்  சொன்ன   செய்தி 
கல்வி தான்  நமக்கு  உயர்ந்த  அந்தஸ்தைப்  
பெற்றுத்தரும் 

எனவே  எப்பாடுப்பட்டாவது  கல்வியை  
நம்  தலைமுறைக்குக்  கட்டாயமாக்குவோம்

வாழ்க  ! அண்ணல்  அம்பேத்கர் புகழ் !!

--த.சத்தியமூர்த்தி  

Saturday, 9 April 2022

Ennam Pol Vazhvu

 எண்ணம்  போல்  வாழ்வு!

வெள்ளத்தனையது  மலரின்  நீர்  மட்டம்  
வாழ்வின்  உள்ளத்தனையது  உயர்வு - வள்ளுவன்  வாக்கு 

நற்சிந்தனையும்,  நல் எண்ணமுமே - நம்மை  
உயர்த்தும்  படைக்கலன்களாகும்  

ஒவ்வொரு  நாளும்  முயற்சி  செய்ய  முன்னேற்றம் 
இலக்கை  நோக்கி  நகர்வதே  வெற்றியின்  இரகசியமாகும்

தனி  மனிதனின்  வெற்றியை  அவன்  உழைப்பு  தீர்மானிக்கும்  
ஒரு  சமூகத்தின்  வெற்றியை  நல்ல  தலைமை  தீர்மானிக்கும்  

ஒரு  நாட்டின்  வெற்றி  மக்களின்  பொருளாதாரத்தை  உயர்த்தும் 
நல்லோழுக்கமும் நற்பண்புகளும்  மக்களின்  வாழ்வாதாரத்தை
உயர்த்தும் 

படித்த  சமூகம்  வெறும்  பணத்தை  சம்பாதிக்கும்  - ஆனால்  
பண்பான  சமூகம்  தான்  நல்ல  தலைமுறையை  உருவாக்கும் 

வாடிய  பயிரைக்  கண்டபோது  வாடினேன் 
என்ற  வள்ளலாரின்  எண்ணம்  தான்
 
 அணையா  அடுப்பை  ஏற்றி  வைத்து 
 மக்களின்  பசிப்பிணியை  அணைத்தது

வெற்றிக்  கோட்டைத்  தொடுவது  தான்  நம்  
எல்லோரின்   இலட்சியமாகும்

ஒவ்வொரு  மனிதனின்  உயர்ந்த  எண்ணமே  
நம்  தேசத்தைப்  பாதுகாக்கும்  அரணாகும் 

நல்லதே  நினைப்போம் ! நல்லதே  செய்வோம் !!
நமக்கு  நல்லதே  நடக்கும் !!!

---த .சத்தியமூர்த்தி