Saturday, 30 October 2021

Vaazhkai part-10

வாழ்க்கை -10 

வாழ்வைப்  புரட்டிப்  போடும்  மூன்று  காரணிகள் 
அவை  பிணி  மூப்பு  மரணம் 

திடமான  மன உறுதி  இருந்தால்  எந்த  
வியாதியையும்  விரட்டியடிக்கலாம் 

கடந்து  போன  காலம்  தரும்  
கசப்பான  பரிசு  மூப்பு 

தியானம் , எளிய   உடற்பயிற்சி ,
அளவான  உணவால் , வயோதிகத்தை  வெல்லலாம் 

வாழ்க்கையில்  சந்தித்தே   தீரவேண்டிய  
கடைசி  அனுபவம்  மரணம் 

மரணத்தின்  தருவாயில்  வாழ்வின்  
மகோன்னதம் புரிகிறது 

சமாதியின் முன்னிலையில்  
சகலமும்  புரிகிறது 

தீராப்பசியோடு  இருந்த  நெரும்பு 
உடலை  விழுங்குகிறது 

பற்றி  எரிந்தப்  பின்னர் 
 சாம்பல்  மிச்சமாயிற்று

மனிதனின்  வாழ்வை  இந்த  மரணம் 
முடித்து  வைக்கிறது 

அழிகின்ற  உடல்  கொண்டு
  அன்றாடம்  ஆயிரம்  நடிப்பு !!

உடலென்பது  உண்மையில்  மறைகின்ற  பதிப்பு !!
மற்றொரு  உடலோடு  கலந்தாடும்  களிப்பு !!

உடலாலே  செய்த  பிழை  ஆறாத  தழும்பு !!
கிடைப்பதற்கு  அரிது  இந்த  மானிடப்பிறப்பு..

நீ  மனிதனாக  பிறந்ததால்  யாருக்கு  சிறப்பு ?

"ஊருக்கு  உணவளிக்கும்  உத்தமரை,
நாட்டுக்கு  நலம்  சேர்க்கும்  நல்லவரை ,
மரணத்திற்கப்பாலும்  மக்கள்  நினைப்பர் 
வாழ்வின்  இலக்கணமே  இது தான் !!"

-----த .சத்தியமூர்த்தி 

Saturday, 23 October 2021

Vaazhkai part-9

வாழ்க்கை -9 

வாழ்க்கை ஒரு  கொலு  மண்டபம் 
நம்மை  பொம்மையாக்கி  அழகு  பார்க்கும் 

வாழ்க்கை  ஒரு  பளிங்கு  மண்டபம் 
நம்மையே  நமக்கு  அறிமுகப்படுத்தும் 

வாழ்க்கை  ஒரு  வசந்த மண்டபம்
தங்கி  கொஞ்சம்  இளைப்பாற  வைக்கும் 

வாழ்க்கை  ஒரு  பொது  மண்டபம் 
எல்லோருடைய  நடிப்பும்  தொடர்ந்து  நடக்கும் 

வாழ்க்கை  ஒரு  தியான  மண்டபம் 
புத்துணர்ச்சி  தந்து  பூபாளம்  பாடும் 

வாழ்க்கை  ஒரு ஆயிரங்கால்  மண்டபம் 
ஒவ்வொன்றும்  ஒரு  கலையைக்  கற்றுத்  தரும் 

வாழ்க்கை  ஒரு  கல்  மண்டபம் 
கரடு  முரடான  பாதைகளைக்  கடக்கும் 

வாழ்க்கை  ஒரு முத்து  மண்டபம் 
கனவில்  மிதந்து  கற்பனையில்   பறக்கும் 

வாழ்க்கை  ஒரு கல்யாண  மண்டபம் 
உறவுகளையெல்லாம்  ஒரு சேர  சேர்க்கும் 

வாழ்க்கை  ஒரு  பட்டி  மண்டபம் 
கருத்துக்கள்  மோதி  தெளிவு  பிறக்கும் 

வாழ்க்கை  ஒரு அர்த்த  நாரீஸ்வரர்  மண்டபம் 
நன்மையும் தீமையும்  கலந்தே  இருக்கும் 

வாழ்க்கை  ஒரு மண்  பாண்டம் 
காலம்  முடிந்ததும்  போட்டு  உடைக்கும்  

வாழ்க்கை  ஒரு மணி  மண்டபம் 
வாழ்ந்த  வாழ்க்கையைப்  பறை  சாற்றும்

வாழ்க்கை  ஒரு அட்சயப்பாத்திரம்  
முடிந்தவரை  அள்ளி  அள்ளிக்  கொடுங்கள் 

வறுமையை  இல்லாது  ஒழிக்க  
நம்  வாழ்க்கை  பிரகாசமாகும் 

----த.சத்தியமூர்த்தி 

Saturday, 16 October 2021

Vaazhkai part-8

வாழ்க்கை -8 

வாழ்க்கை  ஒரு  ரங்க  ராட்டினம் 
மேலும்  கீழுமாக சுற்றி  வரும் 

வாழ்க்கை  ஒரு  சர்க்கஸ்  கூடாரம் 
காட்சி  மாறிக்கொண்டே  இருக்கும் 

வாழ்க்கை  ஒரு  ஏணிப்படி  
படிப்படியாய்  தான்  ஏற  வேண்டும் 

பால்ய  வயதில்  பள்ளியில்  பாடம் 
பருவ  வயதில்  காதலில் பாடம் 

இள  வயதில்  குடும்பப்   பாடம்
நடு  வயதில்  தனிமைப்  பாடம் 

வயோதிக  வயதில்  தத்துவப் பாடம்
மூச்சடங்கும்  வேளை  முழுமைப்  பாடம்

வாழ்க்கை  முழுதும்  பாடம்  புகட்டும் 

வந்து  போனவன் எல்லாம்
  இங்கே  வாழ்ந்தவனல்ல 

வெற்றி    பெற்றவனை  மட்டும்  குறித்துக்  கொள்ளும் 

அனுபவம்  என்னும்  அறிவைப்  போதிக்கும் 
  ஆசான்  வாழ்கை!!
 
ஆசையெனும்  கடலில்  தள்ளி  
அவதிப்  பட வைப்பதும் வாழ்க்கை !! 

இருப்பதை  கொண்டு  மகிழ்வுடன்  வாழ 
சொல்லிக் கொடுப்பதும்   வாழ்க்கை !!

இல்லாததற்கு  ஆளாய்  பறந்து  
அவஸ்தைப்  பட  வைப்பதும்  வாழ்க்கை !!

வாழும்  போது  எதைப்பற்றியும் 
 சிந்திக்காதது  வாழ்க்கை !!

வாழ்ந்து  முடித்ததும், " இன்னும்  கொஞ்சம்  நல்லவனாய் 
வாழ்ந்திருக்கலாம்"  என  எண்ண  வைப்பதும்   வாழ்க்கை !!

வாழ்க்கை  முழுதும்  வான  வேடிக்கையாய்,  ஆரவாரமாய்,  
அமர்க்களமாய்,  ஆடம்பரமாய்,  வாழ்ந்தாலும் 

கூட்டிக்  கழித்து  முடிவில்  பார்த்தால் 
"வெறுமை  மட்டுமே  தனிமையில்  சூழும்" 

கிடைக்கும்  போதே  அடுத்தவர்க்கு 
 கொஞ்சம்   கொடுத்துவிடு. 

""பின்னால்  கொடுப்பதற்கு  இருக்க மாட்டாய்""

நினைக்கும்  போதே  தானம்  செய்து  புண்ணியம்  தேடு 
வாழும்  வாழ்க்கையின்  ரகசியமே   இதுதான் 

---த.சத்தியமூர்த்தி 

  











 
 








    
  
 

Saturday, 9 October 2021

Vaazhkai part-7

வாழ்க்கை -7

வாழ்க்கை   புஸ்வானம்  போன்றது 
பிரகாசத்துடன்  எரிந்து  சாம்பலாவது 

வாழ்க்கை  சங்குசக்கரம்  போன்றது 
நம்மைச்  சுற்றியோ  அல்லது  நம்மை  
சுற்றவைத்தோ  சட்டென்று  முடிப்பது 

வாழ்க்கை  கானல்  நீர்  போன்றது 
தூரத்துப்  பச்சையை  அதிகம்  நேசிப்பது 

வாழ்க்கையோடு  எதற்காகவும்  போராடலாம் 
ஆனால்  போராட்டமே  வாழ்க்கையாகக்   கூடாது 

மனம்  போனபடி  வாழ்வது  வாழ்க்கையாகாது 
கோடு  போட்டு  கொள்கையோடு  வாழ்வதே 
 வாழ்க்கையாகும் 

விட்டுக்   கொடுத்து  வாழ்பவன் வாழ்வு 
 கெட்டுப் போவதியில்லை 

ஒட்டு  மொத்தமாய்  ஆசைப்படுவதால் 
இலாபம்  ஏதுமில்லை  !

மலை  மீது  ஏறி  உச்சியைத்  தொட்டாலும் 
தரைக்கு  வர  கீழே  இறங்கி  வர  வேண்டும் 

வாழ்வின் இயல்பும்  இத்தகையதே !
 
உச்சாணிக்  கொம்பில்  உட்கார்ந்தவனையும் 
ஒருநாள்  உருட்டித்   தள்ளி  விடும் 

அடுத்தவர்  நலனைக்  காப்பவரைக்  
கோபுர  உச்சியில்  கொண்டு  போய்  சேர்த்து  விடும் 

கூடி  வாழ்வதே  கோடி  நன்மை 
கொடுத்து  வாழ்வதே  வள்ளல்  தன்மை 

ஊர்  மெச்ச  வாழ்வதே  வாழ்க்கை 
அதை  உண்மையோடு  வாழ்வதே  நேர்மை 

ஒன்று பட்டால்  உண்டு  வாழ்வு 
இதை  ஓங்கி  ஒலித்தால் ஏது  தாழ்வு !!

---த .சத்தியமூர்த்தி  

Saturday, 2 October 2021

Vaazhkai part-6

வாழ்க்கை -6

ஏராளமான  கனவுகளோடு  
துவக்குகிறோம்  வாழ்க்கையை !!

தாயின்  அணைப்பில்  கொஞ்சம்  ஆறுதல்
தந்தையின்  பராமரிப்பில்  வசதிகள் 

வாழ்க்கை  துணையின்  வருகையால்  வசந்தம் 
மழலையின்  தொடர்ச்சியால்  குதூகலம் 

மண்ணுக்கு  தனியாக  வந்து  பிறந்தாலும் 
உறவுகளின்  சங்கமம்  நம்மைச்  சுற்றி  சுழல்கிறது 

உலகமென்னும்  நாடக மேடையில்  நாள்தோறும்  
நம்  வேடம்  மட்டும்  மாறிக்  கொண்டேயிருக்கிறது

நமது  தேவைகளும்  கூடிக்கொண்டே  செல்கிறது 
பொருளீட்ட  முனைவதிலே  பொழுது  போகிறது 

ஓடி  ஓடி  களைத்து , 
வந்த  வழி  திரும்பிப்பார்த்தால் 
நம்  முன்னேற்றத்தை  தடுக்க  ஆங்காங்கே  முட்புதர்கள் 

நரை  திரை  விழுந்து, 
நாடியது  தளர்ந்து,
மூப்பு  மெல்ல  எட்டிப்பார்க்கும் போது 
வெறும்  பெருமூச்சு 

எட்டிக்காயை விடக்  கசப்பானது  இங்கே  
ஏழைகளின்  வாழ்வு  

தாராளமாய்  தானம்  செய்து  எல்லோரையும் 
வாழ வைப்போம்    

அளவுக்கு  அதிகமாய்  ஆண்டவன்   கொடுப்பதே  
அடுத்தவருக்கு  கொடுக்கத்தான் 

வாழ்க்கைச்  சக்கரத்தால்  மேடு  பள்ளம்  
இல்லாத  உலகைப்   படைப்போம் 

ஏற்றத்தாழ்வு  இல்லாத  சமூகமே--இந்த 
தேசம்  காணவேண்டிய  சமூகமாகும் 

---த .சத்தியமூர்த்தி