மீண்டும் கொரோனா
கூண்டுக்குள் அடைப்பட்ட கிளிகளைப் போல , மீண்டும்
எம்மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போனார்கள்
இரண்டாம் அலையின் தாக்கம் வேகமாக
மக்களை நிலை குனியச் செய்கிறது
அத்தனை மாநிலத்திலும் கோலோச்ச வேண்டுமென்று
தேர்தலில் , ஆட்சி அதிகாரத்தில் , அக்கறைக்காட்டிய
மையஅரசு ஆக்சிஜன் தயாரிப்பில் , அதன்
கையிருப்பில் ஏன் ஆர்வம் காட்டவில்லை ?
கீழ் வான் உதித்த சூரியன் போல்
தமிழகத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றம்
எம் மக்கள் மனதில் எத்தனையோ
நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
கொடூரமாக கொல்லுகின்ற இக்கொடிய
தொற்றிலிருந்து மக்களைக் காப்பதே
இப்புதிய அரசின் தலையாய கடமையாகும்
பொது இடத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து
இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்
கூட்டம் கூட்டமாய் கூடுவதைத் தவிர்த்து
விலை மதிப்பில்லா உயிரிழப்பைத் தவிருங்கள்
எல்லோரும் நம்பிக்கையோடு ஒருங்கிணைந்து
இக்கொடிய நோயை இந்தியாவை விட்டு
விரட்டினோம் எனும் வெற்றிச்செய்தியை
உலகுக்கு உரத்தக்குரலில்
எடுத்துச் சொல்லும்
நாளை ஆவலுடன் எதிர்ப்பார்போம்
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment