Saturday, 15 May 2021

கவலை இல்லா மனிதன்

 கவலை  இல்லா மனிதன் 

கவலையில்லா  உள்ளம்  ஏது ?

மழலையாய்  மண்ணில்  தவழுமட்டும் 
அன்னையின்  அரவணைப்பில்  இருந்தமட்டும் 
எந்த எதிர்பார்ப்பும்  இல்லாதமட்டும்
நமக்கு  கவலையில்லை !

வளர்ந்த  பின்போ  
கவலையில்லா  நாளில்லை 

படித்து  பட்டம்  வாங்கினாலும் 
அலைந்து திரித்து வேலைக்காக  
ஆளாய்  பறந்தபோதும்

வேலையில்லை  என்னும்போது 
கவலைவந்து  சூழுது  

 காலம்  முழுதும்  உழைத்தாலும் 
கால்வயிற்றுக்கஞ்சிக்கும் 

ஆளாகப்   பறக்கும்போது  
வாழ்க்கை  இங்கு  கசக்குது 

காலமெல்லாம்  ஏங்க வச்சி 
கண்டபடி  சுத்த  வெச்சி
 
கண்ணுக்கு  பிடிச்ச பெண்ணுக்கு
  கல்யாணம்னு  தெரிஞ்சதுமே 
கவலை வந்து சூழுது 
  
பணம்  படைத்தக்  கூட்டத்துக்கும் 
பிணி  பிடித்து  ஆட்டும்போது
படாதபாடு  படுகிறது 

காலை  மாலை  வேளை  தோறும் 
கடவுளையே  கும்பிட்டும் 
பக்தன்  உள்ளம்  கலங்குது 

 பகுத்தறிவு  பேசிக்கிட்டு
நாத்திகனாய்  நடமாடும்  
நண்பருக்கும் கவலையுண்டு 

   அத்தனை  கவலைக்கும்  அஸ்திவாரம்  எது ?
ஆசை  ஆசை  ஆசை  தான் 

த .சத்தியமூர்த்தி 

No comments:

Post a Comment