சேரிக்கு என்று விடியல் ?(2)
குப்பைகளைக் கொண்டு வந்து
வீதி நடுவில் கொட்டிப்புட்டு
சாக்கடையின் ஓரம் இவங்க வீடுங்க
இந்த சாதிஜனம் ரொம்ப ரொம்ப பாவங்க
குழாயடி சண்டை உண்டு
குடித்து விட்டு ஆட்டமுண்டு
கலவரங்கள் ஆவதுண்டு
கலாட்டாக்கள் தொடர்வதுண்டு
அடிதடி அமர்க்களங்கள்
அன்றாடம் நடப்பதுண்டு
அத்தனையும் சகித்துக்கொண்டு
இங்கிருக்க ஜனங்களுண்டு
படிக்கிற வயதினில்
வேலைக்கு அனுப்பி விட்டு
கிடைக்கிற கூலியிலும்
குடிக்கிற தகப்பனுண்டு
படிக்க முடியாமல்
படுத்து ஓய்வெடுக்க முடியாமல்
பாட்டுச்சத்தம் மாறி மாறி
சேரி முழுக்க ஒலிப்பதுண்டு
படிப்பறிவின்மையால்
வாழ்வை தொலைத்தவர்கள்
அடியாளாய் இருந்தே
அநியாயமாய் ஏமாற்றப்பட்டவர்கள்
---த.சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment