Saturday, 8 May 2021

சேரிக்கு என்று விடியல் ?(3)

சேரிக்கு  என்று  விடியல் -3 

வறுமையின்  விளிம்பிலே  
வாழவைக்  கடப்பவர்கள் 

இருளிலே  பெரும்  பொழுது 
இன்னலைச்  சந்திப்பவர்கள் 

வெளிச்சத்தின்  கீற்றுக்காக
ஏங்கித்  தவிப்பவர்கள் 

நாளெல்லாம்  உழைத்தும் 
ஓரடிக்கூட முன்னேறாதவர்கள் 

தலைமுறை  தலைமுறையாக  ஏழையாகவே 
வாழ்ந்து  மடிந்தவர்கள் 

தந்தைப்  பெரியார் , பேரறிஞர்  அண்ணா 
முத்தமிழறிஞர்  கலைஞர்  மூவரின்

கூட்டணியால்  தமிழகத்தில்
தீண்டாமை  ஒழிந்தது 

சமத்துவம்  பிறந்தது 
சமூகநீதி  மலர்ந்தது 

குடிசைமாற்று  வாரியம்  முலம் 
குடிசையை  அகற்றி  
கோபுரத்தில்  உயர்த்தி  பார்த்து  மகிழ்ந்தது 

அரசியலமைப்பு  சட்டம்  இயற்றிய 
அண்ணல்  பாபா  சாகேப்  அம்பேத்கர்க்கு 

இதுபோல  தளபதிகள்  அடுத்தடுத்து  
தோன்றாததால் 

ஏனைய  இந்தியாவில் இன்னும்  இச்சமூகம் 
எல்லா நிலையிலும்  தாழ்ந்துக்  கிடக்கிறது 

எல்லோரும்  கல்விக்  கற்று 
ஏற்றமுடன்  வாழக்  கற்றால்

சேரிக்கும்  விடிவு  உண்டு
செல்வம்  வந்து  சேரும்  அங்கு 

---த.சத்தியமூர்த்தி  
      








 












       

No comments:

Post a Comment