மீண்டும் மீண்டும் கொரோனா ஏன் ?
இரும்புப் பெட்டிக்குள்
பணத்தைப் பூட்டி வைத்து
மனதை இரும்பாக்கிய சில தனவான்களாலே
தான தர்மங்கள்
கொஞ்சமாகி
அரிதிலும் அரிதாய் போனதாலே
தொழிலாளரைச் சுரண்டி
கொள்ளையடிக்கும் முதலாளிகள்
சிலரின் பேராசையாலே
மனித நேயமின்றி மக்களையெல்லாம்
ஏய்ச்சிப் பிழைக்கும்
கார்ப்பரேட்டுகளாலே
அரசியலுக்குள் மதத்தைக் கலந்து
மக்களைப் பிரிக்கும்
சூழ்ச்சியினாலே
இலாபம் ஒன்றையே பெரிதாய் எண்ணி
நேரம் பார்த்து கொள்ளையடிக்கும்
சில வியாபாரியினாலே
தடுப்பூசிக்கும் வரியைப் போடும்
மனசாட்சியற்ற
மைய அரசினாலே
பிஞ்சு சிறார்களிடம்
கொஞ்சும் மொழிபேசும்
கொழுப்பெடுத்த சில ஆசிரியராலே
பிரித்துக் கொடுக்கும் பாங்கு இல்லாமல்
கிடைத்ததையெல்லாம் மொத்தமாய்
சுருட்டுவதாலே
ஆன்ம நேயமின்றி
பணத்தாசைப் பிடித்து
ஆளாய்ப் பறந்து அலைவதனாலே
சத்தியத்தை மறந்து
அத்தனைப் பாவத்தையும்
ஆசை ஆசையாய் செய்வதனாலே
-----இன்னும் எத்தனை எத்தனையோ !!!
த .சத்தியமூர்த்தி