இயற்கையின் இரகசியம்
பெய்யாமல் இருந்து கெடுக்கக்கூடியதும் அவ்வாறு
கெட்ட மக்களுக்கு ஆதரவாய் பொழிந்து
வாழ வைப்பதும் மாமழையின் சிறப்பு என
வள்ளுவர் பெருந்தகை சொல்கின்றார்
பொழியாமல் செய்த தவறை
மழைமேகம் திருத்திக்கொள்கிறது
கடல் அலையால் அடித்து வரப்பட்ட குப்பைகளையும்
கழிவுகளையும் தன்னால் ஏற்பட்ட தவறென்று உணர்ந்து
அடுத்து வந்த அலையால் மீண்டும் அக்குப்பைகளையும்
கழிவுகளையும் கடலுக்குள்ளே ஐக்கியமாக்கும்
அலையின் சிறப்பை என்னென்பேன் !
செய்த தவறை உடனே சரி செய்யும் கடல் அலையின்
மாண்பும் மக்களை வாட்டினாலும் உடனே பொழிந்து
வாழ வைக்கும் மழையின் சிறப்பும் தான்
இயற்கையின் இரகசியம்
மனிதன் மட்டும் தான் தான் செய்த தவறை
ஒத்துக்கொள்வதும் இல்லை
திருத்திக்கொள்வதும் இல்லை
அங்கே அலைகள் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கிறது
மழையும் யுகங்களைக்கடந்து பொழிந்து கொண்டே இருக்கிறது
அந்த அலையையும் மழையையும் பார்த்து ரசித்த
மாமனிதர்களின் நிலை !
ஆறடிக்குள் முடங்கி அடங்கி அடக்கமானார்கள்
செய்த தவறை திருத்திக்கொண்டால் நாமும் அந்த
இயற்கையைப் போல காலங்கடந்து வாழ்வோம் !!
-------------த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment