Saturday, 18 July 2020

penmai

பெண்மை 

மஞ்சள்  செய்ததோர்  மகிமை 
மனம்  பறித்ததோர்  எழில்  பதுமை 

பாவை  உடலின்  செழுமை  
பார்க்கும்  கண்களுக்கு  இனிமை 

பூத்து  நின்றதோர்  இளமை 
புவனம்  யாவிற்கும்  ஓர்  புதுமை 

காதலிக்காக  காத்து  இருப்பது  மகிமை 
காதலியை  மனைவியாய்  அடைவது  பெருமை 

கண்டபடி  மனம்  அலைந்தால்  காண்பது  சிறுமை 
மனம்  திறந்து  பேசிவிட்டால்  மாறிவிடும்  நிலைமை 

 மங்கையரை  மகிழ்ச்சியுடன்  வாழ  வைப்பது  கடமை 
பெண்மை   என்றும்  ஆணுக்கு  அடிமை 

என   பேசித்திரிந்தது  மடமை 
மங்கையவள்  சுதந்திரம்   மதித்திடுதல்  நன்மை 

என்றாலும்  கட்டியவள்  காலமெல்லாம் 
கணவனுக்கே  உடைமை 

மொத்தத்தில்   பெண்மை  என்பதே   பெருமை 
பெண்மையை  மதிப்பதே   காலத்தின்  கடமை !!

----த .சத்தியமூர்த்தி   




 

Saturday, 11 July 2020

pillai nila

பிள்ளை  நிலா 

பட்டுப்  போன்ற  கன்னம்  கொண்டு  
பஞ்சுப்  போன்ற  கையை  ஆட்டி  ஆட்டி 
தொட்டினிலே  தெய்வமொன்று  அசையுது - நம் 
சொந்தமொன்று  வந்து  இங்கு  சேர்ந்தது 

கள்ளமில்லா  சிரிப்பு  ஒன்று
 பிள்ளை  இங்கு  சிரிக்கக்கண்டு 
காணும்  கண்கள்  ஆனந்தத்தில்  துள்ளுது -என் 
கவலையெல்லாம்  காணாமல்  போனது 

மழலைச்செல்வம்  வாரியெடுத்து - என் 
மார்போடு  அணைத்த  போது 
மகிழ்ச்சி  வெள்ளம்  பெருகுது  
மனமெல்லாம்  இனிக்குது  

முத்தமொன்று  கன்னத்திலும்  
முகத்திலும்  மாறி  மாறி  பதித்த  போது 
தேனாக  இனித்தது - தெம்பாக  இருந்தது 

கையில்  கிடைத்தப்பொருளையெல்லாம்  எடுக்குது 
உடன்  வாயில்  போட்டு  மெல்ல  மெல்ல   சுவைக்குது 
மண்ணைக்கூட  ஆசையோடு  தின்னுது 
கண்ணைப்போல  தாயுள்ளம்  காக்குது 

செல்வமிங்கு  எத்தனையோ  மண்ணில்  உண்டு 
உயிர்த்  துடிப்பாகும்   மழலைச்செல்வத்திற்கு   ஈடாக  ஏதுண்டு !
தெய்வம்  தந்த  பரிசு  ஏதேனும்  கிடைத்ததென்றால் 
அன்பான  மனைவியும்  அவள்  எனக்களித்த  மழலையும் 

சொர்க்கமென்று  ஏதுமில்லை  
சொந்தமென்று  வந்த 
 மனைவிபோல - மழலைப்போல

அன்புசெல்வங்கள்   எனக்களித்த 
ஆண்டவனுக்கு   நன்றி  சொல்வேன் !!

----------- த .சத்தியமூர்த்தி   







velicham

வெளிச்சம்

பரவியிருந்த  கும்மிருட்டை 
காணாமல்  செய்தது  சூரிய  வெளிச்சம் ..

மனதில் உதித்த  எதிர்மறை  சிந்தனையை 
அகலச் செய்தது  அறிவு  வெளிச்சம் ...

ஒரு  தீக்குச்சியின்  வெளிச்சம் 
இருட்டைத்  தின்றுவிடும்...
  
இருண்ட   அறையில்  அகல்  விளக்கின்  வெளிச்சம் ...
இருட்டைத்  தேடித்தேடி  இல்லாமல்  செய்துவிடும் 

மெழுகுவர்த்தியின்  வெளிச்சம் ..
 தியாகத்தின்  அடையாளம்
  
தீப்பந்தத்தின்  வெளிச்சம் ...
 எல்லோர்க்கும் வழி  காட்ட  உதவும் 

அண்ணாமலையாரின்  தீப  வெளிச்சம் 
அகிலத்திற்கே  ஏற்றி  வைத்த  ஞான  வெளிச்சம் ..

வெற்றியைக் கொண்டாட  கொளுத்தி விடும்  
பட்டாசு  திரியிலிருந்து  புறப்படும்  வெளிச்சமே  
மகிழ்ச்சியின்  உச்சத்தின்  அடையாளம்   

வெளிச்சத்தின்  உறைவிடம்  
பிரகாசத்தின்  இருப்பிடம்

வருங்காலத்தின்  நம்பிக்கையே 
ஏழைகளின்  கண்ணில்  தெரியும்  எதிர்கால  வெளிச்சம் 

எல்லோரின்  வாழ்வின்  ஏக்கமே 
என்றாவது  ஒரு நாள்  விடியும் 
என்ற  வெளிச்சத்தை  நோக்கித்தான் 

வாருங்கள்  தோழர்களே 
 ஆளுக்கொரு தீபமேற்றி 
வெளிச்சத்தைக்  கொண்டாடுவோம் 

                                     -----------த . சத்தியமூர்த்தி  

Sunday, 5 July 2020

iyarkaien ragasiyam

இயற்கையின்  இரகசியம் 

 பெய்யாமல்  இருந்து  கெடுக்கக்கூடியதும்  அவ்வாறு 
கெட்ட  மக்களுக்கு  ஆதரவாய்  பொழிந்து 
வாழ வைப்பதும்  மாமழையின்  சிறப்பு  என  
வள்ளுவர்  பெருந்தகை  சொல்கின்றார் 

பொழியாமல்  செய்த  தவறை
  மழைமேகம்  திருத்திக்கொள்கிறது

கடல்  அலையால்  அடித்து  வரப்பட்ட குப்பைகளையும்
கழிவுகளையும்  தன்னால்  ஏற்பட்ட  தவறென்று  உணர்ந்து 
அடுத்து  வந்த  அலையால்  மீண்டும்  அக்குப்பைகளையும் 
கழிவுகளையும்  கடலுக்குள்ளே  ஐக்கியமாக்கும் 
அலையின்  சிறப்பை  என்னென்பேன் !

செய்த  தவறை  உடனே சரி  செய்யும்  கடல்  அலையின் 
மாண்பும்  மக்களை  வாட்டினாலும்  உடனே  பொழிந்து 
வாழ  வைக்கும்  மழையின்  சிறப்பும் தான்  
இயற்கையின்  இரகசியம் 

மனிதன்  மட்டும் தான் தான்  செய்த  தவறை 
ஒத்துக்கொள்வதும்  இல்லை 
திருத்திக்கொள்வதும்  இல்லை 

அங்கே  அலைகள்  தொடர்ந்து  அடித்துக்கொண்டே  இருக்கிறது 
 மழையும்  யுகங்களைக்கடந்து  பொழிந்து  கொண்டே  இருக்கிறது
அந்த  அலையையும்  மழையையும்  பார்த்து  ரசித்த  
மாமனிதர்களின்  நிலை  !

ஆறடிக்குள்  முடங்கி  அடங்கி  அடக்கமானார்கள் 

செய்த  தவறை  திருத்திக்கொண்டால்  நாமும்  அந்த  
இயற்கையைப்  போல  காலங்கடந்து  வாழ்வோம் !!
        
-------------த .சத்தியமூர்த்தி