Sunday, 2 July 2023

Voozhal

ஊழல்  

சமூகத்தை  செல்லரிக்கும்  உயிர்க்கொல்லி  ஊழல் 
தேசத்தின்  வளர்ச்சிக்கு  முட்டுக்கட்டை  ஊழல் 

மக்களின்  வரிப்பணத்தை,  அட்டை போல்  உறிஞ்சி  கொழுத்த  ஊழல் 
சட்டத்தின்  ஓட்டைக்குள்  ஒளிந்து  கொண்டு  சாகசம்  காட்டும் ஊழல் 

கோடிக்கணக்கில்  சொத்துக்களைக்  குவித்து வலம் வரச்   செய்யும் ஊழல் 

ஏழைகளின்  கண்ணீரில்  கும்மாளமிடும்  மனசாட்சியற்ற  
மந்திரமே  ஊழல்

அதிகார போதையிலே  ஆளவட்டம்  போடும்  சதிகாரர்களின் சாகசமே  ஊழல் 

தேனொழுக  பேசி,  மக்களை  ஏமாற்றும்  வித்தைக்  கற்று  
தருவதே  ஊழல்  

மக்களை  விலைபேசி , ஓட்டுக்கு  காசு  கொடுத்து  ஆட்சியைப்  பிடிக்கும் 
சூத்திரமே  ஊழல் 

கை  நீட்டி  காசு  வாங்கியதால்  தட்டிக்கேட்க  முடியாமல் 
நடப்பதை  வேடிக்கைப்  பார்க்கும்  பொம்மைகளாய்  மக்கள் 

கொள்ளையடித்த  பணத்தைக்   கொண்டு  யாரையும்  
விலை பேசும்  வித்தையைக்  கற்றது  ஊழல் 

வருங்கால  தலைமுறையே !
நீயாவது  விழித்துக்கொள் !

ஓட்டுக்காக  யாரிடமும்  கைநீட்டி  காசு  வாங்காதீர் !
ஊழலற்ற சமூகத்தை  உங்களிடமிருந்து  உருவாக்குங்கள் 

நல்லவர்களைத்  தேர்வு செய்து நல்லாட்சி  அமையுங்கள்

மக்களுக்கான  நேர்மையான  ஆட்சியை , அதிகாரத்தை 
 மக்களுக்கு  வழங்குங்கள்

ஒளிமயமான  தமிழகத்தைப்  படைத்திடுங்கள்  
  
---  த .சத்தியமூர்த்தி 

No comments:

Post a Comment