வலிமை
உளியின் வலிமை சிலையைச் செதுக்கும்
கலப்பையின் வலிமை விளைச்சலைப் பெருக்கும்
நாவின் வலிமை புரட்சிக்கு வித்திடும்
பேனாவின் வலிமை ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலிடும்
காலத்தின் வலிமை வளர்ச்சியைக் காட்டும்
கவிதையின் வலிமை முக்காலத்தையும் கடக்கும்
அழகின் வலிமை காண்பவரை வசப்படுத்தும்
அறிவின் வலிமை அரசாட்சி செய்யும்
அன்பின் வலிமை அகிம்சையைப் போதிக்கும்
பண்பின் வலிமை நல்ல பழக்கத்தை ஏற்படுத்தும்
எண்ணத்தின் வலிமை எதிர்காலத்தை உருவாக்கும்
மக்களின் வலிமை எதையும் சாதிக்கும்
இராணுவத்தின் வலிமை தேசத்தைப் பாதுகாக்கும்
தேசத்தின் வலிமை குடிகளை உயர்த்தும்
உழைப்பவன் வலிமை உற்பத்தியைப் பெருக்கும்
போராட்டத்தின் வலிமை உரிமைக்கு வழிகாட்டும்
சர்வாதிகாரியின் வலிமை ஜனநாயகத்தைச் சாகடிக்கும்
குடியரசின் வலிமை மக்களை ஒன்றுபடுத்தும்
பெண்மையின் வலிமை குடும்பத்தைக் கட்டிக்காக்கும்
சமூகத்தின் வலிமை சந்ததியைப் பாதுகாக்கும்
ஒற்றுமையின் வலிமை ஓங்கி வளர உதவும்
ஈகையின் வலிமை இல்லாமையைப் போக்கும்
-----------த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment