நினைவில் நின்ற கதை-7
எப்படி கெட்டியாக மனதை வைத்திருந்தாலும்
இது எப்படி திடிரென்று ஒருவர் மேல் மையல் கொள்கிறது
பார்க்காமல் போனாலோ மனம் பதறுகிறது
எதை வைத்து அவள் மேல் இப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டது
அவளைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாமல்
அவள் தான் இனியெல்லாம் என எண்ணத் தோன்றுகிறது
இருவரும் சொல்லி வைத்தார் போல்
இதைத்தான் எண்ணிக் கொண்டிருந்தோம்
பதிப்பாசிரியர் கேட்டார் " எவ்வளவு நாள் பழக்கம் !
ஒரு ஆறு மாதமாக பதில் சொன்னேன்
பெண் எப்படி ? படித்தவளா , வசதியானவளா ,
எந்த சமூகம் ? இந்த ஊரா
அடுத்தடுத்து கேள்வி கேட்டார்
ஒன்றுக்கும் என்னிடம் பதிலில்லை
எதுவுமே தெரியாது,
ஆனால் அவளை உன்னோடு சேர்த்து வைக்கவேண்டும்
எப்படிடா எல்லோரும் ஒரேமாதிரி காதலிக்கிறீர்கள் ?
பேசியது உண்டா ?
ஆம் , விழியால் பேசிக்கொள்வோம்
சுத்தம்,
அடுத்தமுறை உன்னோடு நானும் வருகிறேன்
உன் மனம் விரும்பியவளைக் காண
என்னை நம்பித்தான் உன்னை சென்னைக்கு
அனுப்பி இருக்கிறார்கள் உன் பெற்றோர்."
விஷயத்தை அவர் காதில் போட்ட பின்னால்
கொஞ்சம் மனம் இலேசானது
எப்பொழுதும் விரும்பிப் படிக்கும் பாரதியின்
கவிதைக்குள் நுழைந்தேன்
"எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் பராசக்தி"
வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடிய மாபெரும்
கவிஞனின் பார்வையில் எத்தனை இன்பம்
கண்ணம்மாவை, அன்புமனைவியை உயிராய்
நேசித்ததால் அவன் உள்ளம் எதற்கும் கலங்கியதில்லை
---த .சத்தியமூர்த்தி