வாழ்க்கை -5
வாழ்க்கை ஒரு மந்திரக்கோல்
அத்தனைக்கும் ஆசை பட வைக்கும்
வாழ்க்கை ஒரு திறவுகோல்
அத்தனைக்கும் மயங்க வைக்கும்
வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்
படிக்க சுவாரசியமாய் இருக்கும்
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
இறைக்கிற கிணறு தான் சுரக்கும்
அன்னமிட்ட வீட்டிலே தான்
அன்னலட்சுமி விரும்பி வாசம் செய்வாள்
வந்தாரை, வாழ வைக்கும் வளமான தமிழகம்
வாழ்வை செம்மையாக்கும் வலிமையான மந்திரங்கள்
சமூகத்தையே வாழவைத்த
பண்டைய தமிழ் நாகரிகம் !!
கூட்டுக்குடும்பமாய் கள்ளங்கபடமில்லாமல்
வாழ்ந்த நம் மூதாதையர் !
விருந்தோம்பலை, விரும்பிக் கடமையாய் செய்த
நம் தமிழ் சொந்தங்கள்
வீரமும் மானமும் இரு விழிகளாய்
காத்த உத்தமர்கள்
தேசத்தின் நலனுக்காக வாழ்வை தியாகம் செய்த
கப்பலோட்டிய தமிழன்
சுப்பிரமணிய பாரதி
சுப்பிரமணிய சிவா
எப்பேர்ப்பட்ட பரம்பரைக்கு சொந்தக்காரர்கள் நாம் !!
நம் வாழ்க்கை எப்போதும் நம் நலத்தோடு
மட்டும் முடிவதல்ல
மண்ணுக்காய் உயிர் நீத்த நம் தேசியத் தலைவர்
மாவீரன் மேதகு பிரபாகரனின்
வழித் தோன்றல்கள்
அடுத்தவர் நலனுக்காய் நம் காலடித்தடத்தை
அழுத்தமாய் பதிப்போம்
வாழ்க்கைக்கு புது புது அர்த்தத்தை
வருங்கால தலைமுறைக்கு எடுத்துரைப்போம்
--த .சத்தியமூர்த்தி