விழி காட்டிய ஜாலங்கள்
சிலைகொத்த மேனி உன் எழில் கண்டு
சிந்தனையை இழந்து நின்ற கனமுண்டு
உன் விழி காட்டிய ஜாலங்கள் எத்தனையோ ?
அவை விபரீத விளையாட்டின் முத்திரையோ !
நிலையில்லா உன் நெஞ்சம் என் வசமே
நீ தானே என் தோட்ட பூ வாசமே
உன்னோடு கலந்து விட்ட உயிரிங்கே
ஊரெல்லாம் தேடியும் நீ எங்கே ?
போட்டு வைத்த பூப்பந்தல் வாடுதிங்கே
பொட்டு வைத்த பூவழகி போனதெங்கே ?
ஆசைக்காட்டி காதல் பயிர் வளர்த்தவளே
ஏனோ பாதியிலே பரிதவிக்க விட்டுவிட்டாய்
வானத்து விண்மீனோ வெண்ணிலவை வட்டமிட ,
கானகத்து குயிலினங்கள் கானத்தை பாடி வர,
காவிருக்கும் பூவெல்லாம் வண்டுக்காய் காத்திருக்க ,
மானத்தை உயிராய் மதிக்கும் மங்கையர் வழிவந்த
வையகத்து பெண் மானின்
பொன் கரத்தைப் பற்றிநின்று
முன்பு யான் பெற்றிருந்த சுகத்தை எண்ணி
பெருமூச்சு விட்டபடி
விழி நீரால் அமைந்த குளத்தில் என்
நெஞ்சமெனும் மீனாடும் விபரீத
விளையாட்டைக் காணத்தான்
உன் விழி காட்டிய ஜாலங்கள் அன்று
அதன் விடை காண முடிந்தது இன்று
---த . சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment