ஆதாரம்
யானைக்கு அங்குசம் ஆதாரம்
குதிரைக்கு கடிவாளம் ஆதாரம்
கப்பலுக்கு நங்கூரம் ஆதாரம்
கவிதைக்கு சொல்லாடல் ஆதாரம்
விழிக்கு கருணையே ஆதாரம்
மொழிக்கு இலக்கணமே ஆதாரம்
தமிழுக்கு இனிமையே ஆதாரம்
தமிழர்க்கு விருந்தோம்பலே ஆதாரம்
உடலுக்கு உயிரே ஆதாரம்
உலகுக்கு ஒளியே ஆதாரம்
உயர்வுக்கு உழைப்பே ஆதாரம்
வெற்றிக்கு நம்பிக்கையே ஆதாரம்
நெஞ்சுக்கு நீதியே ஆதாரம்
நேர்மைக்கு உண்மையே ஆதாரம்
கல்வி தான் மனித குலத்தின் ஆதாரம்
காலமே நம் வளர்ச்சியின் ஆதாரம்
வறியவர்க்கு கொடுப்பதே செல்வத்தின் ஆதாரம்
வறுமையை ஒழிப்பதே மானுடத்தின் ஆதாரம்
மனிதனுக்கு மானமும் வீரமுமே ஆதாரம்
மக்களாட்சியே உரிமைக்கு ஆதாரம்
நாட்டுக்கு நல்லாட்சியே ஆதாரம்
நல்லவரை ஆள வைப்பதே பொற்காலம்
விடுதலைக்கு அஞ்சாமை ஆதாரம்
ஜனநாயகத்திற்கு வி ழிப்புணர்வே ஆதாரம்
இன உணர்வு கொள்வதே
காலத்தின் கட்டாயம்
ஒன்று பட்டு வெல்வதே
நம் அனைவரின் இலக்காகும்
---த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment