இரு சாராருக்கும் கனிவான வேண்டுகோள்-1
தமிழ் மொழிக்காகவும் , தமிழ் இனத்திற்காகவும் ,
ஈழத் தமிழரின் இன்னலுக்காகவும் ,
வாழ்நாள் முழுவதும் பல்வேறு
போராட்டங்களை முன்னெடுத்தவர்கள்
திராவிடர் கழக , திராவிட முன்னேற்றக் கழகத்தார் ..
தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா ,
முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற
மாபெரும் தலைவர்களின் பிம்பத்தை உடைப்போம்
என தமிழ் தேசியம் பேசுவதும் ,
வரலாற்றை மறைக்கப் பார்ப்பதும் ,
வரலாற்றை மாற்றப் பார்ப்பதும் ,
விந்தையிலும் விந்தை !!
புலிகளைக் காரணம் காட்டி
திமுக ஆட்சியைக் கலைத்ததும் ,
கலைஞரும் , பேராசிரியரும் சட்டமன்ற
உறுப்பினர் பதவியைத் துறந்ததும் ,
டெசோ மாநாடு நடத்தி இலங்கைப் பிரச்சனையை
தமிழகம் முழுக்கக் கொண்டு சென்றதும் ,
சமூகநீதி , சுயமரியாதை , சமத்துவம்
போன்றவற்றைக் கட்டமைத்ததும் ,
தமிழகத்தை வளர்ச்சிப் பெற்ற
மாநிலமாக மாற்றியதும் ,
திராவிடத்தின் சாதனை
இலங்கையில்
கணவன் கண் முன்னே , மனைவியைக் கற்பழித்ததும் ,
சகோதரன் கண் முன்னே , சகோதரியை நிர்வாணப்படுத்தியதும் ,
தமிழனின் தொடை கறி விற்கப்படும்
என பதாகைக் கட்டியதும் ,
வெறிபிடித்த வேட்டை நாயைப்போல தமிழினத்தை
கருவருத்த சிங்கள இராணுவத்தை எதிர்த்து
முப்பது ஆண்டுகாலம் அரசியல் வழியில்
போராட்டம் நடத்தி இனிவேறு
வழியே இல்லையென்றக் கட்டத்தில்
ஈழ விடுதலைக்கும் , ஈழ மக்களைக் காக்கவும் ,
அங்குள்ள நம் சகோதரர்கள்
ஆயுதம் ஏந்தினார்கள்
-----வேண்டுகோள் தொடரும்..
த . சத்தியமூர்த்தி