நாட்டு நடப்பு - 1
ஏழைகளின் விழிகளிலே
எத்தனையோ சோகம்
படிக்கின்ற இளவயதில்
உழைக்கின்ற கூட்டம்
கஞ்சிக்கும் அல்லாடும்
இளந்தளிர்களின் தாகம்
கொள்ளையரைக் கோட்டையினுள்
ஆள விட்டதின் சாபம்
பட்டியலோ நீள்கிறது
கட்சிகளின் சாதனைகள்
பட்டினியால் வாடுகின்ற
பரதேசிக் கோலங்கள்
மாளிகையில் மதுவோடும் மங்கையோடும்
அதிகாரத்தின் கொட்டம்
மண் குடிசையிலே விளக்கேற்ற
எண்ணெய்க்கோ பஞ்சம்
நாளெல்லாம் உழைத்தாலும்
நியாயமான கூலியில்லை
உழைப்பதற்கு முன் வந்தும்
திறனுக்கேற்ற வேலையில்லை
லாபத்தின் பெரும்பங்கு
கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளிலே
பாடுபடும் தொழிலாளர்களின்
குடும்பங்களோ வறுமையிலே
ஐந்து ரூபாய் திருடியவன்
அகப்பட்டால் சிறை வாசம்
ஐந்து கோடி திருடினாலும்
அதிகாரவர்க்கம் என்றால் சுகபோகம்
சட்டத்திற்கும் தோன்றிவிடும்
அவர்கள் மீது புது பாசம்
சட்டத்தையே வளைத்து விடும்
அவர்களின் அதிகாரம்
நீதிதேவன் மயங்கியதோ
மீளாத நித்திரையில்
ஜாதி மத முத்திரைகள்
ஜனங்களின் முகத்திரையில்
நாட்டு நடப்பு தொடரும் ........
------த .சத்தியமூர்த்தி