Saturday, 2 May 2020

nadigan

நடிகன் 

நேற்று வரை  அவனைப் பற்றி  ஒருவரும்  கவலைப்படவில்லை
இன்றோ  ஊரெல்லாம்  அவனைப் பற்றியே ஒரே  பேச்சு 
இது  எப்படி ?
அவன்  வளர்ந்து விட்டானா ! இந்த  சமூகம்  மாறி விட்டதா  !
இரண்டும்  இல்லை  
அவன்  நடிகனாக  மாறி விட்டான் 

பொன்னும்  பொருளும்   பின்னால்  வந்தது
அத்தனையும்  அழகுமயில்   பெண்ணால்  வந்தது 
அவள்  சொன்னால் " வாழபிறந்தவன்  நீ "என்று
அவனோ " வாழ்வைத்தொலைத்தவன்  நான் " என்றான்

அதற்கு அவள்"தொலைப்பதற்க வாழ்க்கை  என்ன பொருளா "என்றாள்  
 அடுத்தவரைப் போல் நடிக்கும்  ஆற்றலை  அவனிடம்  கண்டு  
"நடிகனாக  முயலலாம்  "என்றாள் 
அதைக்கேட்டு அவன் சிரித்தான்.தன்  நிலை  எண்ணி  உடனே  அழுதான் 
கைதட்டி  ரசித்தாள் .  அவன்  புரியாமல்  விழித்தான் 
நடிகனாகலாம்  என்றேன் . நீயோ  நடித்தே  காட்டி விட்டாய்  என்றாள் . 

எதற்கும்  உதவாதவன்  என்று  எவருமே  இங்கு  பிறக்கவில்லை 
உங்கள்  ஆற்றல்  உங்களுக்கு  புரியாது என்றாள் .
அரங்கத்தில்  மேடையேறி  அம்பலத்தில்  நடிகனானான் 

ஒருநாள்  கழிப்பது  ஒரு யுகமானது  அன்று  
ஒருநாள்  நடிப்புக்கு  ஊதியம்  பெறுவது  இன்று
நாட்கள்  கசந்தது  அன்று -- அதே 
நாட்கள்  கரன்சியை  கறந்தது  இன்று 

காலம்  எப்போதும்  சுழல்கிறது .
 இப்போதுதான் அவன்  முறை  வந்தது 
காற்று  எப்போதும்  வீசிக்கொண்டு  இருந்தது .
இப்போதுதான்  அவன்  திசை  நோக்கி  அடிக்கிறது 

ஆலமரமாய்  அவன்  வளர்ந்ததாலே  தங்கி  இளைப்பார 
சொந்தமென்று  கூட்டம்  சேர்ந்தது 
நடிகனாக   மட்டுமல்ல - அவன்  நல்ல  
மனிதனாகவும்  இருந்தான்  

தன்  ரசிகர்களுக்கு  கையெழுத்து  இடுமுன் 
தவறாமல்  இதை  குறித்தான்  
"கட்டிவைத்த  மாலையோடு  இந்த  சமூகம்  காத்து  இருக்கிறது "
திறமை  உள்ளவனுக்குத்தான்  இங்கு  தினமும்  திருவிழா 
"எதையாவது  செய்  .  அதையே  இன்னும்  சிறப்பாக  செய் "

                                           --த . சத்தியமூர்த்தி 

  


No comments:

Post a Comment