Wednesday, 13 May 2020

maaji kadhalikku makizhvudan oru kaditham

மாஜி  காதலிக்கு  மகிழ்வுடன்  ஒரு  கடிதம் 

வாசல்   வரை வந்துவிட்டேன் ; வாயிலது  திறக்கவில்லை ;
கால்  கடுக்க  காத்திருந்தும்  கதவதுவோ  திறக்கவில்லை ;
விம்மி  விம்மி  மனம்  அழுதும்  விழிகளிலே  நீரில்லை ;
வந்த  வழி  திரும்பி  விட்டேன்  ; வழியெல்லாம்  அழுதுவிட்டேன் ;

சென்றதையோ  மறந்துவிட  முயன்றாலும்  முடியவில்லை ;
தென்றலதன் துணையின்றி  செல்லுமிடம் புரியவில்லை ;
ஆசையினை  வளர்த்தவளே  அறுவடையைச்   செய்துவிட்டாள் ;
அடுத்தக்கட்டம்  தொடருமுன்னே  எனை  விடுத்துச்சென்றுவிட்டால் ;

இளமையிலே  இனியதொரு நினைவுகளை  
தந்ததற்க்கு  என்  நன்றி ;
கனவுகளை  வளரவிட்டு  எனைக்  கவிஞனாக  
ஆக்கியதற்கு  மீண்டும்   என்  நன்றி ;

நினைவுகளில்  கலந்திருந்து 
 நிம்மதியைத்  தருவதனால்  
சென்ற  இடம்  எல்லாம்  
சிறப்புடனே   நீ  வாழி ! ! 

                                                ---- த . சத்தியமூர்த்தி 
  

No comments:

Post a Comment