Wednesday, 6 May 2020

kaalam

காலம் 

"முத்தெடுக்க  வேண்டும்  என்பதற்காகவே  ஒவ்வொரு முறையும் 
கடலுக்குள்  செல்கின்றேன் " என்னுடைய  போறாத  காலமோ 
என்னவோ  வெறும்  கிளிஞ்சல்களோடு  மாத்திரம் 
கரைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் 

அழுதுகொண்டு  நிற்பவனிடம்  அறிஞன் " காலத்தின் மீது 
பழியைப்போட்டுவிட்டு  உனது  இயலாமையிலிருந்து 
தப்பித்துக்கொள்ள  முயல்கிறாய்  "

காலத்தைப்பற்றி  சொல்கிறேன்  நண்பா  
உனது  மூதாதையர்க்கு  ஒருகாலம்  சொந்தமாக  இருந்தது 
உனக்கு  நிகழ்காலம்  சொந்தமாக  உள்ளது  
உனது சந்ததியர்க்கு  வருங்காலம்  சொந்தமாகப்போகிறது
காலம்  என்னவோ  ஒன்றுதான்    
வாழுகின்ற  காலம்  மட்டும்தான்  உனக்கு  சொந்தம்  அப்படிப்பட்ட 
காலம்  கண்  போன்றது  பொன்  போன்றது 

முத்தெடுக்க  வேண்டுமென்றால்  ஆழ்கடலுக்குச்   செல்ல  வேண்டும் 
அதற்கு  மூச்சடக்கும்  பயிற்சியைக்  கூட்ட  வேண்டும் 
பயிற்சி  செய் - விடா  முயற்சி  செய் - வெற்றிக்கிட்டும்  என்று 
சொல்லிவிட்டு  அறிஞன்  சென்று  விட்டான்  

பயிற்சியில்  இறங்கலானான்  ஆழ்கடலில்  மூழ்கலானான் 
முத்துக்களை அள்ளிக்கொண்டு வந்து நாளடைவில் 
முத்து வணிகனானான்

குளத்திலே  இறங்கினால்தான்  நீச்சல்  பழகமுடியும்  அதுபோல் 
களத்திலே  இறங்கினால்தான்  வெற்றி  காண  முடியும் 
கூட்டை  விட்டு  வெளியே  வந்தால்  தான்  வானத்தில்  
சுதந்திரமாக  சிறகடித்து  பறக்க  முடியும் 

விதைக்கிற  காலத்தில் விதைத்தால்  தான்  அறுவடை  காலத்தில்  
ஆனந்தமாக  இருக்கமுடியும் 
எல்லாவற்றையும்  காலாகாலத்தில்  செய்து  முடிப்போம் 
 காலமெல்லாம்  களிப்போடு  கவலையின்றி  வாழ்வோம் 

              --- த. சத்தியமூர்த்தி    



  







No comments:

Post a Comment