Sunday, 7 May 2023

penne ! vazhga nee pallandu !!

பெண்ணே ! வாழ்க  நீ  பல்லாண்டு !!

மஞ்சளும் , குங்குமம்  சூடி , மணமாலை  கழுத்தில்  ஏந்தி ,
மங்கள  நாண்  பூண்டு , கண்ணுக்கு  ஒத்த 

 கணவனோடு  குடும்பம்  என்னும் , படகில் 
பயணிக்கும்  குலமகளே ! வாழ்க  நீ  பல்லாண்டு !!

கதிரவன்  எழும்பும்  காலை  நேரத்தில்  கன  கச்சிதமாய் 
எழுந்து , குளித்து  நீராடி ,பால் பொங்கவைத்து 

பல்வேறு பலகாரம்  செய்து , வயிறார  படைத்து 
உண்ணும்  அழகைப்  பார்க்கும்  உத்தமியே ! வாழ்க  நீ  பல்லாண்டு !!

குடும்பச்சுமையை , குதூகலத்துடன்  சுமந்து  , 
வருங்காலச்  சந்ததியை  வயிற்றினில்  சுமந்து ,

அதோடு  ஓடியாடி,  வேலையும்  செய்து  தாய்மை 
பூரித்து  நிற்கும்  மனையாலே ! வாழ்க  நீ  பல்லாண்டு !!

பெற்றெடுத்த  குழந்தையை  கையில்  சுமந்து 
வாரியெடுத்து  அமுதமெனும்  பால்  கொடுத்து  

மார்போடு  அணைத்து , மழலை  மொழிபேசும்  
குழந்தைக்கு  முத்தமீந்து , கொஞ்சி  மகிழ்ந்து 

குழந்தையோடு  குழ்நதையாய்  மாறிய  
குலக்கொழுந்தே ! வாழ்க  நீ  பல்லாண்டு !!

பள்ளிக்கு  அனுப்ப  , அத்தனையும்  பார்த்து  பார்த்து செய்து 
வளரும்  குழந்தையோடு  வேலை  செய்த  களைப்பில் 

தேகம்  இளைத்து , வாலிபத்தை  கொஞ்சம்  கொஞ்சமாக 
கடக்கும்போது  கணவன்  , மகள் என  

குடும்பத்துக்காக  கரையும்  மெழுகுவர்த்தியே !
வாழ்க  நீ  பல்லாண்டு !!

நல்ல  வரன்  அமைந்தால்  திருமணத்தை  நல்லபடி 
நடத்திவிட , அதற்கான  முனைப்பில்  

ஜாதகத்தைக்  கையிலெடுத்து , அதற்கான  வேலையில்  
இறங்கி  மகளை  நல்ல இடத்தில்  மணமுடிக்க 

ஓடியாடும்  திருமகளே !
வாழ்க  நீ  பல்லாண்டு !!

மங்கள  நாண்  சூடி மகள் , தன்  மணாளனோடு  
புதுவாழ்வு  துவக்கி  தன்  புது மனையில் 

தாயைபபோலவே  குடும்பம்  என்னும் 
 படகில்  பயணிக்கப்   புறப்பட்டாள்

குடும்பத்திற்காகவே  வாழும்  
குலமகள்களே  ! வாழ்க  நீங்கள்   பல்லாண்டு !!

--த .சத்தியமூர்த்தி  

No comments:

Post a Comment