Saturday, 27 May 2023

Kudi Magangaluku

 குடி  மகன்களுக்கு 

கல் தோன்றி , மண்  தோன்றா காலத்தே 
முன் தோன்றிய  மூத்தக்குடி  எம்  தமிழர் குடி

உலகுக்கே  நாகரிகத்தைக்  கற்றுத்தந்த  
கட்டுப்பாடு மிக்க  ஓர்  குடி  என்  தமிழர்  குடி 

இத்தனை  சிறப்புமிக்க  தமிழினம்  ஒரு  சில 
அரசியல்வாதிகளின்  சூழ்ச்சிக்கி  இரையாகி  

கோடிகோடியாக  கொள்ளையடிக்க , மக்களிடம் 
கடந்த  நாற்பது  ஆண்டுகளில்  திராவிட அரசுகள் 

மதுவுக்கு   அடிமையாக்கி , மதியை  இழக்கவைத்து 
நடைப்பிணமாய்  தள்ளாட  வைத்துள்ளார்கள் 

குடி  குடியைக்  கெடுக்கும்  
குடி  குடும்பத்தின்  மகிழ்ச்சியைக்  கெடுக்கும் 

குடி  மெல்ல  மெல்ல  உயிரைக்   குடிக்கும்
குடி  குடும்பத்தை  நடுத்தெருவில்  நிறுத்தும் 

குடியின் மூலம்  வருவாயைப்  (தங்கள்)  பெருக்கி 
தமிழினத்தை  நாசமாக்குவதே  
திராவிட மாடலின்  சாதனையாகும் 

குடிப்பதற்கு  முன்னால்  உங்களின்  சிந்தனைக்கு 
46000 கோடி  ரூபாயை  உங்களிடமிருந்து,  சாமர்த்தியமாக
சுரண்டுகின்ற , உறிஞ்சுகின்ற , அரசின்  
திட்டத்திற்கு  துணைபோகாதீர்கள் 

ஊர்க் குடியைக்  கெடுத்துவிட்டு  தங்கள்  குடி  மட்டும் 
வசதியாக  வாழும்  என்று  யாரும்  கனவு  காணாதீர்கள் 

காலம்  உங்களைக்  கடுமையாக  தண்டிக்கும் 

மதுவிலிருந்து  மீண்டு  வந்து  தமிழர்களே  குடும்பத்தோடு 
மகிழ்ச்சியாக  வாழ  முயற்சி  செய்யுங்கள் 

மதுயெனும்  அரக்கனின்  பிடியிலிருந்து  தமிழினம் 
விடுபடும்  நாளே  எம்  இனத்தின்  திருநாளாகும் 

அந்நாளை  நோக்கி  நம்பிக்கையோடு  நகர்வோம் 

---த .சத்தியமூர்த்தி 

No comments:

Post a Comment