பெண்ணுக்குப் பிடித்தவை -1
தங்கத்தாமரை ஒன்று பொன்னிற மேனியோடு
தரையில் வந்து பெண் குழந்தையாய் மலர்ந்தது
வானத்து நிலவு ஒன்று பௌர்ணமி வெளிச்சமாய்
மண்ணுக்கு வந்து மகாலட்சுமியின் அம்சமானது
பூத்து நின்ற புது மலரைப்போல புன்னகையைச்
சிந்தி கை கொட்டி ரசிக்கிறது
அந்த பெண்ணுக்கு பிடித்தவை வரிசையில்
கை நிறைய வளையல்கள் மாட்டி அதை கலகலவென
ஆட்டிப் பார்ப்பதில் கொள்ளை பிரியம்
இரட்டை ஜடை போட்டுக்கிட்டு , பாவாடை தாவணியில்
பலரும் வைய்த்த கண் வாங்காமல் பார்ப்பதில்
பெருமை பொங்கும் பிரியம்
கார்முகில் போன்ற கூந்தலைத் திருத்தி தனக்கு
பிடித்த மலரைச் சூடப் பிரியம்
விதவிதமாய் புடவைக்கட்டி கண்ணாடி முன்னின்று
தன் அழகைப் பார்த்து தானே ரசிப்பதில் பிரியம்
கல்வியைக் கருத்துடன் பயின்று நல்ல நிலைக்கு வந்து
கை நிறைய சம்பாதிப்பதில் அத்தனை பிரியம்
ஆணுக்கு நிகராக அத்தனை வேலைகளையும் தங்களாலும்
செய்ய முடியுமென செய்து காட்டப் பிரியம்
மஞ்சள் பூசி குளிப்பதென்றால் மாதரசிக்கு
கொள்ளை பிரியம்
குடும்பத்தைக் காக்கும் குத்து விளக்காய்
சுடர்விட்டு பிரகாசிக்க அத்தனை பிரியம்
பெண்ணில்லா உலகத்தை கற்பனைச் செய்ய முடியாது
தாயின் பத்து மாத தவத்தால் தான்
ஆணினமே பிறக்கிறது
--த .சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment