இயற்கையின் செய்தி
அண்ணாந்து பார்க்கும் ஆகாயத்தில்
ஆயிரமாயிரம் இரகசியங்கள் புதைந்துள்ளது
அதல பாதாளத்திலும் தங்கமும் வைரமும்
வெட்டி எடுக்கப்படுகிறது, பட்டைத் தீட்டப்படுகிறது
காடுகளில் செழிப்போடு மரங்களெல்லாம்
யார் நீரூற்றி பாதுகாத்து வளர்த்தது
எல்லாவற்றையும் தனக்குள் மாயமாய் மறைத்துக் கொண்டு
இயற்கை சுழன்றுக் கொண்டுள்ளது
நிழல் தந்து, காய் கனி தந்து, மொத்தத்தையும்
எடுத்துக்கொள் , என செழித்து வளர்ந்த மரங்கள்
எல்லாம் சொல்லாமல் சொல்கிறது
மலையிலிருந்து புறப்பட்டு தவழ வைத்ததற்காக
மட்டுமே , மண்ணை வளப்படுத்தி , பயிரை வளர வைத்து ,
மானுடத்தைக் காக்கிறது
கரைப் புரண்டு ஓடிவரும் ஆறுகளெல்லாம்
இயற்கை மனிதனின் உற்ற நண்பனாகி தன்
படைப்புகளையெல்லாம் தானம் செய்கிறது
மனிதனோ இயற்கையின் முதல் எதிரியாகி
மரத்தை வெட்டி , காட்டை அழித்து , மணலை அள்ளி
கனிமங்களையெல்லாம் கொள்ளையடித்து
அதிகாரத்தைக் கொண்டு அதிகாரம் செய்கிறான்
தர்மத்தின் வழி மறந்து , மானுடம் தவறும் போது
கொதிப்படைந்த இயற்கை பல்வேறு வழிகளில்
மனித குலத்தைப் பழி வாங்குகிறது
இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில்
மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு,
தர்மத்தின் வழியில் நடந்தால் இயற்கை
வாஞ்சையோடு நம்மைப் பாதுகாக்கும் .
---த.சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment