Sunday, 19 February 2023

மேதகு

மேதகு  

முள்ளிவாய்க்கால்  படுகொலைக்குப்  பின்  
கொஞ்சம்  கொஞ்சமாக  ஈழமக்கள்  தங்களை  

தாங்களே  காத்துக்கொள்ளும்  அவல  நிலையில் ,
புலிகளின்  சார்பாக  தமிழகத்தில்  அறிக்கை  வெளியிட்டது  ஏன் ?

இரத்தமும் , சதையுமாய்  புதைகுழிக்குள்  புதைந்த  
ஈழத்து   மக்களின்  சவக்குழியின்  மேல்  நின்று  
அரசியல்  சதிராட்டம்  ஆடுவதேன் ?

விடுதலைப்புலிகளுக்கான  தடையைத்  தொடரவா ?
நாட்டைவிட்டு  ஓடிய  இராஜபக்க்ஷேவுக்கு  மறுவாழ்வு  கொடுக்கவா ?

புத்த  பிக்குகள்  மீண்டும்  வெறியாட்டம்  போடவா ?
இலங்கை  இராணுவம்  வைப்பற்றிய  நிலத்தை  அபகரிக்கவா ?

ஈழத்தமிழரின்  மேல்  வன்மம்  கட்டவிழ்த்து விடவா ?
புலம் பெயர்ந்த  தமிழருக்கு  நெருக்கடி  கொடுக்கவா ?

புறநானூற்றில்  படித்த  சங்ககால  தமிழரின்  வீரத்தை  
நம் கண் முன்னே  உண்மையென  நிரூபித்து  , 
களத்திலே  தம்  குடும்பம்  முழுவதையும் தியாகம்  செய்த 
மாவீரனை  யாரும்  கொச்சைப்  படுத்த  வேண்டாம் 

தேசியத்தலைவர்  பிரபாகரன்  மீண்டுவந்தால்  
ஒட்டுமொத்த  தமிழினத்திற்கும்  மகிழ்ச்சி தான் 

ஈழத்தமிழர்கள்  இனியாவது  நிம்மதியாக  வாழ  
தமிழ்  மண்ணில்  திருவாய்  மூடி  இருங்கள் 

முள்ளிவாய்க்கால்  இனப்படுகொலையை  தடுத்து  நிறுத்தும்  
சக்தியற்ற  நம்மால்  அவர்களுக்கு  சங்கடம்  வேண்டாம் 

துரோகிகளின்  பட்டியல்  கருணாவின்  
பெயரோடு  முடியட்டும் 

இலங்கைத்   தமிழர்களுக்கு  இனியாவது  
விடியல்  பிறக்கட்டும்  

வாழ்க  தமிழினம்  !! வெல்க  தமிழினம் !!
வாழ்க  மேதகு மாவீரன்  பிரபாகரன் !!

-த .சத்தியமூர்த்தி    

No comments:

Post a Comment