Sunday, 19 February 2023

மேதகு

மேதகு  

முள்ளிவாய்க்கால்  படுகொலைக்குப்  பின்  
கொஞ்சம்  கொஞ்சமாக  ஈழமக்கள்  தங்களை  

தாங்களே  காத்துக்கொள்ளும்  அவல  நிலையில் ,
புலிகளின்  சார்பாக  தமிழகத்தில்  அறிக்கை  வெளியிட்டது  ஏன் ?

இரத்தமும் , சதையுமாய்  புதைகுழிக்குள்  புதைந்த  
ஈழத்து   மக்களின்  சவக்குழியின்  மேல்  நின்று  
அரசியல்  சதிராட்டம்  ஆடுவதேன் ?

விடுதலைப்புலிகளுக்கான  தடையைத்  தொடரவா ?
நாட்டைவிட்டு  ஓடிய  இராஜபக்க்ஷேவுக்கு  மறுவாழ்வு  கொடுக்கவா ?

புத்த  பிக்குகள்  மீண்டும்  வெறியாட்டம்  போடவா ?
இலங்கை  இராணுவம்  வைப்பற்றிய  நிலத்தை  அபகரிக்கவா ?

ஈழத்தமிழரின்  மேல்  வன்மம்  கட்டவிழ்த்து விடவா ?
புலம் பெயர்ந்த  தமிழருக்கு  நெருக்கடி  கொடுக்கவா ?

புறநானூற்றில்  படித்த  சங்ககால  தமிழரின்  வீரத்தை  
நம் கண் முன்னே  உண்மையென  நிரூபித்து  , 
களத்திலே  தம்  குடும்பம்  முழுவதையும் தியாகம்  செய்த 
மாவீரனை  யாரும்  கொச்சைப்  படுத்த  வேண்டாம் 

தேசியத்தலைவர்  பிரபாகரன்  மீண்டுவந்தால்  
ஒட்டுமொத்த  தமிழினத்திற்கும்  மகிழ்ச்சி தான் 

ஈழத்தமிழர்கள்  இனியாவது  நிம்மதியாக  வாழ  
தமிழ்  மண்ணில்  திருவாய்  மூடி  இருங்கள் 

முள்ளிவாய்க்கால்  இனப்படுகொலையை  தடுத்து  நிறுத்தும்  
சக்தியற்ற  நம்மால்  அவர்களுக்கு  சங்கடம்  வேண்டாம் 

துரோகிகளின்  பட்டியல்  கருணாவின்  
பெயரோடு  முடியட்டும் 

இலங்கைத்   தமிழர்களுக்கு  இனியாவது  
விடியல்  பிறக்கட்டும்  

வாழ்க  தமிழினம்  !! வெல்க  தமிழினம் !!
வாழ்க  மேதகு மாவீரன்  பிரபாகரன் !!

-த .சத்தியமூர்த்தி    

Sunday, 12 February 2023

kudumbam

குடும்பம் 

நல்லதொரு  குடும்பம்  - ஒரு  
பல்கலைக்கழகம்  

குடும்பம்  ஒரு  கோயில்  
அன்பெனும் தீபம்  சுடர்  விடும்  போது 

குடும்பம்  ஒரு  கதம்பம்  
இன்பமும்  துன்பமும்  கொட்டிக்  கிடப்பதால் 

தாயெனும்  தெய்வத்தின்  உழைப்பாலே  பத்திரமாய் 
பாதுகாப்பாய்  இருக்கும்  குடும்பம் 

கட்டுக்கடங்காத  காளையை  
பொட்டிப் பாம்பாக  மாற்றுவது  குடும்பம் 

கணவனும்  மனைவியும்  கட்டியெழுப்பும்  
காதலெனும்  கோட்டையே  குடும்பம் 

மழலைகளோடு  மகிழ்ச்சி  கரை  புரண்டோடும் 
கற்பகத்தருவே  குடும்பம் 

வாழையடி  வாழையென  தலைமுறையைக் 
கடத்துகின்ற  பெட்டகமே  குடும்பம் 

அகில  உலகிற்கும்  பாரதத்தின்  மீதான பிரமிப்பே
உறவுகள்  மகிழ்வோடு  கூடி  வாழும்  குடும்பம் 

பரம்பரையாய்  குலசாமிக்கு  பொங்கலிட்டு  , குலவையிடும் 
பாரம்பரிய  பெருமை  மிகு குடும்பம் 

சமூகத்தை  இணைக்கின்ற  பாலமாக  சங்ககாலம் 
தொட்டு  தொடர்கின்ற  குடும்பம் 

பசப்பிணைப்போடு  ஒருவர்  மீது  ஒருவர்  
அக்கறைக்  கொள்ளும்  அன்பு  நிறைந்த  குடும்பம்

இந்தியக்  குடும்பம்   இருப்பதைக்   கொடுக்கும் 
பண்பு  நிறைந்த  பாசமிகு  குடும்பம்  

பாரதம்  என்னும்  ஒற்றைக்  குடையின்  கீழ் 
ஒரே  குடும்பமாய்  நாம்  இணைவோம்  

மகிழ்ச்சியுடன்  நிறைவாய்  வாழ்வோம் 

---த .சத்தியமூர்த்தி     

Sunday, 5 February 2023

Pathavi

பதவி

ஏற்றி  விட்ட  ஏணியை   
எட்டி  உதைப்பது  பதவி 

பத்து  தலைமுறைக்கு  சொத்து  சேர்க்கும் 
பகடைக்காயே   பதவி 

படிப்பறிவில்லாத  பாமரனும்  
பந்தாவாக  வலம்  வர  செய்வது  பதவி 

நாட்டு  மக்களின்  வரிப்பணத்தை 
ஏப்பம்  விட  வைக்கும்  பதவி 

படித்தவன் , பணக்காரன்  எல்லோரையும் 
கூழைக்கும்பிடு  போட வைக்கும்  பதவி

ஓட்டுக்கு  காசு  கொடுத்து  மக்களை  
விலைக்கு  வாங்கும்  பதவி 

அதிகார  போதையில்  அத்தனைப்  பேரையும் 
அடக்கி  வைத்திடும் பதவி 

லஞ்சம்  என்பதை  தேசிய  மயமாக்கிய
லட்சியம்  கொண்டது  பதவி 

ஜாதியாலே  , மதத்தாலே  , மக்களைக்  
கூறு  போட்டது  பதவி 

மமதையோடு  மக்களையெல்லாம்  புழு  , பூச்சாக 
பார்க்க வைத்திடும்  பதவி 

கொள்ளையடிப்பதைக்  கொள்கையாக
  கொண்டவனுக்கே பதவி 

ஏமாந்ததெல்லாம்  போதும்  .இனியாவது 
தகுதியானவனுக்கே  போகுமா  பதவி ?

மக்களுக்கான  தலைவனைத்  தேர்ந்தெடுப்பதே 
மக்களின்  தலையாய  கடமையாகும் 

நல்லவனுக்கு  வாக்களிக்கும் - புதிய 
தலைமுறையை  உருவாக்குவோம் 

---த .சத்தியமூர்த்தி