ஆரம்பம்
இல்லறத்தின் இனிய துவக்கம் தான்
நல்ல குடும்பத்தின் ஆரம்பம்
இரு மனங்களின் இணைப்பின் துவக்கம் தான்
இனிய மழலைகளின் வருகைக்கான ஆரம்பம்
தவழ்வதற்கு , நடப்பதற்கு , பேசுவதற்கு துவக்கமே
மழலைகளின் இடைவிடாத ஆரம்பம்
வெற்றிக்கான ஆரம்பமே, தொடர்ந்த பயிற்சியும்
விடாத ஊக்கமும் , கடின உழைப்பே ஆகும்
சமூகத்தின் வளச்சிக்கான ஆரம்பமே அவர்களின்
விழிப்புணர்வை பொறுத்தே அமையும்
ஆரம்பம் அமர்க்களமாய் அமைந்து விட்டால்
அடுத்தடுத்த நிலைகளைத் தாமாக எட்டி விடலாம்
நாளை செய்யலாம், என நாளைத் தள்ளிப் போடாமல்
இன்றே இப்பொழுதே, ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்
நல்லதொரு துவக்கமே மிகப்பெரிய
எழுச்சிக்கு வித்திடும்
நல்ல நல்ல நூல்களைத் தேடித்தேடிப் படிப்பதே
அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆரம்பம்
அச்சமின்றி அனைவரும் உண்மைக்காக ஓரணியில்
திரள்வதே நாட்டின் நன்மைக்கான ஆரம்பம்
பதுக்கி வைக்கும் பழக்கத்தை விட்டு , பங்கு போடும்
சமதர்மத்தைக் கடை பிடித்தால் பொதுவுடமைக்கான ஆரம்பம்
நல்லவர்கள் கையில் நாட்டை ஒப்படைப்பதே
உண்மை ஜனநாயகத்தின் ஆரம்பம்
கூடி வாழும் சமூகமே கோடி நன்மை பெறும்
ஒன்று பட்ட சமூகமே வாழ்வாங்கு வாழும்
அதற்கான இனிய துவக்கமே நல்ல ஆரம்பம்
--த .சத்தியமூர்த்தி
,