செயலாக்கு
கண்ணும் கருத்துமாய் படிப்பைக் கற்று
பட்டம் பெறுவதில் செயலாக்கு
ஏழை ,எளியோரின் துயர் நீக்கவே
உழைப்பதை நாளும் செயலாக்கு
கவிதைகள் மூலம் மக்கள் மனதினில்
நம்பிக்கை விதைப்பதைச் செயலாக்கு
காலம் மாறும் ,வசந்தம் வீசும்
கலப்பையை உழுது செயலாக்கு
கைத்தொழில் மூலம் அர்ப்பணிப்போடு
ஒன்றி பாடுபட செயலாக்கு
வேலை செய்தால் மட்டுமே நல்ல வேளை வரும்
என ஊருக்கு உரைத்திட உண்மையாகவே செயலாக்கு
படிப்படியாக வளர்ந்து, பணக்காரர் வரிசையில் ,
நம்மையும் இணைத்திட , முனைப்புடனே செயலாக்கு
வீண் பேச்சை பேசியே வீணானது போதும்
இனியாவது செயலில் இறங்கி வெற்றி காணவே செயலாக்கு
விடியும் பொழுதினை, விரும்பியே வரவேற்று
உற்சாகமுடன் செயல்பட செயலாக்கு
சட்டமும் நிதியும், பணம் படைத்தவர்க்கே!
ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது! என்றால்
மக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் ஜனநாயகக்
கடமையை செயலாக்கு
நல்ல நல்ல செயல் திட்டத்தால் தான்
மக்களிடம் நம்பிக்கை பெற முடியும்
இல்லையென்றால் ஆட்சிகள் மாறும் காட்சிகள்
நாளை இங்கே அரங்கேறும்
என்ன நன்மை செய்தார்கள் என்பதை வைத்தே
மக்கள் எதிர்காலத்தில் நல்ல முடிவெடுப்பார்கள்
--த .சத்தியமூர்த்தி