Saturday, 28 May 2022

Appa

 அப்பா!

அப்பா!  அப்பா!  மந்திர வார்த்தையிது 
மகுடிக்குக்  கட்டுப்பட்ட  நாகம்  போல் 

நம்மை  இம்  மண்ணுக்கு  கொண்டு வந்தது 

கடந்த  காலங்களில்   நம்மைப்  பொத்திப்   பொத்தி  பாதுகாத்தது
 
நம்  கண்  அசைவை  வைத்தே  நம்  தேவைகளை  
ஒவ்வொன்றாய்  பூர்த்தி  செய்தது  

கம்பீரமாய் கையைப் பிடித்து கடை  வீதியில்
உலா வந்து  மகிழ்ந்தது  

ஆசை  ஆசையாய்  கேட்டதையெல்லாம்  அள்ளிக்கொண்டு  
வீடு  வந்து  சேர்ந்தது 

பண்டிகைக்   காலங்களில் நம்மை  மகிழ்விக்க 
வேண்டியதையெல்லாம்  கொண்டு  வந்து  சேர்த்தது     

அதிர்ந்து  பேசாமலே  ஆயிரம்  விஷயங்களை  
அற்புதமாய்  செய்தது 

நம்மை  படிக்க வைத்து ஆளாக்க  
படாத  பாடு  பட்டது 

திருமணம்  செய்து  வைத்து  நமக்கொரு  
குடும்பத்தைக்  கொடுத்தது 

குடும்பத்தைக்  கட்டிக்காக்கும்  குத்துவிளக்காய்  தாயிருக்க 
விளக்கில்  சுடர்விட்டு  பிரகாசிக்கும்  தீபமாய்  எம்  தந்தை  

தடுக்கி  விழுந்தால்  தூக்கி விட  தாயுண்டு  ஒருகாலத்தில் 
ஓடிவந்து  அரவணைத்து  ஆறுதல்சொல்ல  தந்தையுண்டு 
அதுவும்  ஒரு  காலத்தில் 

ஆனால்  இன்றோ  விழுந்தாலும் , எழுந்தாலும் 
அழுதாலும்  ஆறுதலுக்கு  நமக்கு  நாம்  மட்டுமே 

எந்த  ஒரு  எதிர்பார்ப்பும்  இல்லாமல்  உண்மையாக 
அன்பு  செய்வது   தாய் தந்தை  மட்டுமே 

நமக்காகவே  காலமெல்லாம்  வாழ்ந்து  
நம்  கண்  முன்னே  மூச்சடங்கி  போனது 

வாழ்வின்  நீண்ட  நெடிய  பயணத்தைப்  புரியவைத்து 
ஒரு  சிறிய  படத்துக்குள்  அடக்கமாகி  போனார்கள் 

வாழ்க  எம்  பெற்றோர்   

--த .சத்தியமூர்த்தி 

Sunday, 22 May 2022

May 18

மே 18

ஒரு குடும்பம்  நாட்டின்  கஜானாவை  முழுவதுமாய்  கொள்ளையடித்ததால் 
ஒட்டு மொத்த  இலங்கையும்  இன்று  திவாலானது 

கொத்து  கொத்தாய்  இரசாயன குண்டுகளை  வீசி  எம்  
தமிழினத்தைக்   கொன்று    குவித்தபோது ,வாய் மூடி
  
மௌனியாய்  மௌனித்த  சிங்கள  இனம் 
தமிழினத்தின்  சாபத்தால்  இன்று  நிலை  குலைந்து  போனது 

உரிமைக்காக  போராடியது  வீரமிகு  எம்  தமிழினம் 
சோத்துக்காக , பாலுக்காக  போராடுகிறது  சிங்கள  இனம் 

பன்னாட்டு  இராணுவத்தை  எதிர்த்து  ஆண்மையோடு 
களத்தில்  நின்று  போராடிய  வீரமிகு  எம்  தலைவன்  எங்கே !

உயிருக்கு  பயந்து  கோழையாய்  ஓடி  ஒளிந்த  
சிங்கள  சர்வாதிகாரி  எங்கே !

இரத்த  வெறிபிடித்த பௌத்தப்   பிட்சுகளின்  
பேச்சைக்  கேட்டு  இன்னமும்  நீங்கள்  ஆட்சி  செய்தால்  

இதைவிட  மோசமான  நிலை தான்  மிஞ்சும் 

இனிமேலாவது  சிங்கள மக்கள்  தங்களை  மாற்றிக்  கொண்டு 
தமிழர்களின்  உடைமைகளை , உரிமைகளை  பகிர்தளியுங்கள் 

உரிமைக்காக  போராடிய  எந்த  இனமும்  
வீழ்ந்ததாய்  வரலாற்றில்  பதிவுகள்  இல்லை 

இனி  இழப்பதற்கு  ஒன்றுமில்லை  என்று சொல்லுமளவுக்கு 
தமிழினம்  எல்லாவற்றையும்  இழந்தது 

சர்வதேச சமூகம்  இந்த  படுபாதக  செயலைச்  செய்த 
குற்றவாளிகளைக்  கூண்டில்  ஏற்றி  தண்டிக்கவேண்டும் 

எம் தலைவனின்  வீரம் , மானம் ,இவற்றோடு  
இளைய  தலைமுறையின்  வழிகாட்டுதலில்  

எம்  இனம்  வெற்றி  நடை  போடட்டும் 

--த .சத்தியமூர்த்தி