Sunday, 18 April 2021

Vennilave

 வெண்ணிலவே !!

அன்னமொன்று  மெல்ல  மெல்ல  ஆசை தீர
ஆடி வந்து  கொஞ்சு  மொழி  பேசுகிறது 

உலவுகின்ற  தென்றலது  ஊரெல்லாம்  பவனி  வந்து 
உவகையுடன்  உள்ளமதைக்  கொள்ளைக்  கொண்டது 

மந்திரப்  பதுமையவள்  வாய்  சிறிது  மலர்ந்தாலே 
மயக்கத்தின்  உச்சிக்கே  சென்றதுண்டு 

சித்திரப்  பாவையவள்  சிரித்தாலே  போதும் 
சிந்தனையின்  கதவு  மெல்ல  சிறகடித்து  பறந்து விடும்

கண்ணிரண்டில்  புகுந்து  
என்  கருத்தெல்லாம்  நிறைந்தவளே !

பொன்னிறமாய்  மேனியெழில்  
அமைந்திட்ட  தேவதையே  !

பூத்து  நிற்கும்  புது  மலரே !
புவனத்தின்  பேரொளியே !

வார்த்தெடுத்த  உயிர்  பிழம்பே !
வட்ட  முக  வெண்ணிலவே 

அசைகின்ற பூங்கொடியே !
ஆசை  வைத்த  இளங்கிளியே !

பண்போடு  பழகுவதில் 
பட்டம்  பெற்ற  பாவையே  !

அன்போடு  உபசரிக்கும் 
அழகு  தமிழ்  ஓவியமே  !

சொல்லெடுத்து  கவி பாடும்
இளங்கவியின்  பெட்டகமே !

மணம்  பரப்பும்  மல்லிகையே !
மாலை  சூடும்  மனங்கவர்  காதலியே !

துடிக்கின்ற  உயிர்  மூச்சே !
துணையாகும்  இள  மொட்டே !

காலம்  வரும்  !   இணைந்திடுவோம் !
காவியங்கள்  பல  படைத்திடுவோம் !

--த .சத்தியமூர்த்தி 

 










No comments:

Post a Comment