Sunday, 11 June 2023

Kadum Kodai

 கடும்  கோடை 

கோடையின் தாக்கம்  கொளுத்தும்  வெயிலால் 
மக்களை  வாட்டி  வதைக்கிறது 

விண்கலங்களை  ஏற்றிக்கொண்டு,  கடும்வேகத்தில்   ராக்கெட் 
வான்  மண்டலத்தில்  ஓட்டை  போடுவதால்  வெப்பத்தின்  
தாக்கம்  அதிகரிக்கிறது 

மேலைநாடுகள்  தங்கள்  வான்  மண்டலத்தைப் பாதுகாக்க  
தங்கள்  விண்கலங்களை  இந்தியாவிடம்  தந்து  விண்ணில்  
செலுத்துவதால்  நம்  வான்  மண்டலம்  பாதிப்புக்குள்ளாகிறது  

மணலை  அள்ளுவது  , கனிமங்களை  வெட்டுவது ,
மலையைக்   குடைவது,  இப்படி  இயற்கையை  அதிகாரவர்க்கம்

கொள்ளையடிக்கும் போது , தட்டிகேட்காத   மக்களை  இயற்கை 
இதுபோல  காலம் பார்த்து கடுமையாக  தண்டிக்கிறது 

மரக்கன்றுகளை  நடுவது , பராமரித்து  வளர்ப்பது ,
நீர்நிலைகளைப்  பாதுகாப்பது  இவைதான்  வெப்பத்தை  
தணிக்க  உதவும்  

மழைக்காலத்தில்  பெருகிவரும்  மழைநீரை  சேமிக்க  
வழிசெய்யாமல்  வீணாக  பெரும்பகுதி  
கடலில்  கலப்பதாலும்  , நீராதாரம்  வெகுவாகக்  குறைந்து
 
வடஇந்தியாவைப்   போன்ற  கடும் வெப்பம்
 நம்  தமிழகத்தில்  உள்ளது 

நம்  முன்னோர்கள்  இயற்கையோடு  இணைந்து  தங்கள்  
வாழ்வை  அமைத்துக்கொண்டதால்  கடந்த  
களங்களில்   இதுபோன்ற  வெயில்  கிடையாது

இனியாவது  விழித்துக்கொண்டு  நீர்நிலைகளை  தூர்வாறி 
மழைநீரை  சேமிப்போம்  

பாலைவனம்  போல்  நம்  தமிழ்  மண்ணை  மலடாக்காமல்  
எப்போதும்  ஈரத்தோடு  இருக்க  பாதுகாப்போம் 

தன்னை  வெட்டுபவனைக்  கூட  தாங்கி நிற்கும்  
தயாள  குணம்  படைத்தது  நம்  தமிழ்  மண் 

மரம்  நடுவோம் . மழை பெறுவோம் .
வெய்யில்  தானாக  தணியும் ..

--த .சத்தியமூர்த்தி